MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • மலிவு விலையில் 8 நாள்.. சிவராத்திரி ஸ்பெஷல் டூர்.. டிக்கெட் விலை எவ்வளவு?

மலிவு விலையில் 8 நாள்.. சிவராத்திரி ஸ்பெஷல் டூர்.. டிக்கெட் விலை எவ்வளவு?

மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஐஆர்சிடிசி 'திவ்ய தக்ஷிண யாத்திரை' என்ற சிறப்பு ரயில் சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த மலிவு விலை திட்டத்தில் பயணம், தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவை அடங்கும். இதன் முழு விபரங்களை பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 12 2026, 02:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஐஆர்சிடிசி சிவராத்திரி ரயில்
Image Credit : Google

ஐஆர்சிடிசி சிவராத்திரி ரயில்

மகா சிவராத்திரியை முன்னிட்டு தென்னிந்திய புனித தலங்களை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு ஐஆர்சிடிசி இனிய செய்தியை அறிவித்துள்ளது. ‘திவ்ய தக்ஷிண யாத்திரை’ என்ற சிறப்பு ரயில் சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. திருவண்ணாமலை, ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய சிவஸ்தலங்களை செலவில் தரிசிக்க வாய்ப்பு வழங்குகிறது. இந்த யாத்திரை பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்குகிறது.

25
திருவண்ணாமலை தரிசனம்
Image Credit : Google

திருவண்ணாமலை தரிசனம்

மொத்தம் 7 இரவுகள், 8 நாட்கள் நீடிக்கும் இந்த பயணம் செகந்திராபாத் நிலையத்திலிருந்து துவங்கும். திருவண்ணாமலை, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருச்சி மற்றும் தஞ்சாவூர் போன்ற புகழ்பெற்ற தலங்கள் இதில் அடங்கி உள்ளன. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பக்தர்களும் எளிதில் பயணம் செய்யும் வகையில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Related image1
இந்த நிறுவன ஸ்கூட்டரை தான் மக்கள் அதிகம் வாங்குறாங்க.. ஓலா, ஏதர் லிஸ்டில் இல்லை
Related image2
பேங்க் சுற்ற வேண்டாம்… வட்டி செலுத்த வேண்டாம்… மோடி அரசின் அதிரடி கடன் திட்டம்!
35
தென்னிந்திய கோயில் சுற்றுலா
Image Credit : our own

தென்னிந்திய கோயில் சுற்றுலா

டிக்கெட் விவரங்களைப் பார்த்தால், ஏகானமி கிலாஸ் பெரியவர்களுக்கு ரூ.14,700, குழந்தைகளுக்கு (5–11 வயது) ரூ.13,800 ஆகும். கம்ஃபர்ட் கிலாஸ் பெரியவர்களுக்கு ரூ.28,700, குழந்தைகளுக்கு ரூ.27,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் பயணம், தங்கும் வசதி மற்றும் உணவு உள்ளிட்ட சேவைகள் அடங்கும்.

45
மலிவு யாத்திரை திட்டம்
Image Credit : Getty

மலிவு யாத்திரை திட்டம்

பயண அட்டவணைப்படி, பிப்ரவரி 21 மதியம் 12 மணிக்கு ரயில் செகந்திராபாத்திலிருந்து புறப்படும். ஜங்காவ், காஜிப்பேட், வாரங்கல், கம்மம், விஜயவாடா, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா போன்ற முக்கிய ஸ்தலங்களில் இருந்து பக்தர்கள் ஏறலாம். இரண்டாம் நாளில் அருணாசலேஸ்வரர் கோயில் தரிசனம், பின்னர் ராமேஸ்வரம் மற்றும் மதுரை பயணம் நடைபெறும்.

55
தென்னிந்திய கோயில் டூர்
Image Credit : Asianet News

தென்னிந்திய கோயில் டூர்

கன்னியாகுமரியில் விவேகானந்த ராக் நினைவிடம், சூரிய அஸ்தமன காட்சி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், கோவளம் கடற்கரை மற்றும் தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயிலில் தரிசனம் ஆகியவை இடம்பெறும். எட்டாம் நாளில் இரவு 9 மணிக்கு ரயில் மீண்டும் செக்குந்தராபாத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள விரும்பினால் ஐஆர்சிடிசியின் இணையதளத்தை அணுகலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்
சுற்றுலாத் தொகுப்பு
திருவண்ணாமலை
தஞ்சாவூர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சீனாவே செம ஷாக்! உலகிலேயே மலிவு விலை 'ஹை-ஸ்பீடு' பயணம் - வந்தே பாரத் படைத்த புதிய சாதனை
Recommended image2
ஏ.ஆர்.ரகுமான் இசைபாடும் சாலை... இந்தியாவின் முதல் மியூசிக் ரோடு எங்கு உள்ளது தெரியுமா?
Recommended image3
பிரபல பால் பிராண்டுகள் தரச் சோதனையில் தோல்வியா? அதிர்ச்சி தரும் புதிய ஆய்வு!
Related Stories
Recommended image1
இந்த நிறுவன ஸ்கூட்டரை தான் மக்கள் அதிகம் வாங்குறாங்க.. ஓலா, ஏதர் லிஸ்டில் இல்லை
Recommended image2
பேங்க் சுற்ற வேண்டாம்… வட்டி செலுத்த வேண்டாம்… மோடி அரசின் அதிரடி கடன் திட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved