MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • இந்த நிறுவன ஸ்கூட்டரை தான் மக்கள் அதிகம் வாங்குறாங்க.. ஓலா, ஏதர் லிஸ்டில் இல்லை

இந்த நிறுவன ஸ்கூட்டரை தான் மக்கள் அதிகம் வாங்குறாங்க.. ஓலா, ஏதர் லிஸ்டில் இல்லை

இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. வலுவான சேவை வலையமைப்பு மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையே பாரம்பரிய நிறுவனங்களின் இந்த மீள் எழுச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 12 2026, 10:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்
Image Credit : Google

டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த சந்தையை புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தின. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அனுபவமிக்க பாரம்பரிய வாகன நிறுவனங்கள் தற்போது மின்சார இருசக்கர வாகனத்தில் முன்னிலை வகிக்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சேடக் மூலம் பஜாஜ் பிடித்த இடம்
Image Credit : Google

சேடக் மூலம் பஜாஜ் பிடித்த இடம்

ஒரு காலத்தில் ஓலா மற்றும் ஏதர் போன்ற நிறுவனங்கள் இந்தத் துறையில் முன்னணியில் இருந்தன. 2024 இறுதியில் பஜாஜ் ஆட்டோ தனது ‘சேடக்’ மாடல் மூலம் மீண்டும் வலுவான போட்டியாளராக களம் இறங்கியது. ஆனால் 2026 தொடக்கத்தில் சந்தை நிலைமை மீண்டும் மாறியுள்ளது. இப்போது டிவிஎஸ் மோட்டார் முன்னணியை கைப்பற்றி சந்தையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

35
 முதலிடத்தை பிடித்த டிவிஎஸ்
Image Credit : TVS

முதலிடத்தை பிடித்த டிவிஎஸ்

2026 ஜனவரி விற்பனை கணக்குகள் இதை தெளிவாக காட்டுகின்றன. டிவிஎஸ் நிறுவனம் 34,558 யூனிட்கள் விற்பனை செய்து முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோவை விட சுமார் 9,000 யூனிட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் டிவிஎஸ் 44% ஆண்டு வளர்ச்சி பதிவு செய்யப்பட்டது. அதே சமயம் பஜாஜ்j வளர்ச்சி 19% மட்டுமே. இந்த வித்தியாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

45
ஹீரோ மோட்டோகார்ப் முன்னேற்றம்
Image Credit : OLA

ஹீரோ மோட்டோகார்ப் முன்னேற்றம்

இந்த வளர்ச்சி கதை டிவிஎஸ் மட்டும் அல்ல. ஏதர் எனர்ஜி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனங்களும் புதிய யுக்திகளால் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால் ஒரு காலத்தில் சந்தையின் மூன்றில் ஒரு பகுதியை வைத்திருந்த ஓலா எலக்ட்ரிக், தற்போது கடுமையான சரிவை சந்தித்துள்ளது. ஜனவரியில் அதன் விற்பனை 69% குறைந்து 7,516 யூனிட்களாக மட்டுமே இருந்தது.

55
25% வளர்ச்சியில் மின்சார இருசக்கர வாகனங்கள்
Image Credit : Google

25% வளர்ச்சியில் மின்சார இருசக்கர வாகனங்கள்

மொத்தமாக பார்த்தால், 2026 ஜனவரியில் 1,22,812 மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி 25% வளர்ச்சி கண்டுள்ளது. இந்திய இருசக்கர சந்தையில் மின்சார வாகனங்களின் பங்கு தற்போது 6.6% ஆக உயர்ந்துள்ளது. ஆனால் வெற்றி பெற்ற நிறுவனங்கள் மாறிவிட்டன. வலுவான சேவை வலையமைப்பு மற்றும் நம்பிக்கையால் பாரம்பரிய நிறுவனங்கள் மீண்டும் முன்னிலையில் உள்ளன.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின்சார ஸ்கூட்டர்
வாகனம்
டிவிஎஸ் ஐக்யூப்
ஓலா
ஹீரோ ஸ்கூட்டர்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Samsung Galaxy A08: ரூ.18,499 தான் விலை... 6,000mAh பேட்டரி, 50MP கேமரா, 6 ஆண்டு அப்டேட் கொண்ட சாம்சங் போன்
Recommended image2
Bajaj Pulsar NS400Z: புதிய பஜாஜ் பல்சர் NS400Z அறிமுகம்! 5 இன்ச் TFT திரை.. விலை எவ்வளவு தெரியுமா?
Recommended image3
மாருதி கார்களுக்கு ரூ.1.36 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி.. எந்தெந்த மாடல்கள்? முழு லிஸ்ட் இதோ!
Related Stories
Recommended image1
ரூ.5.59 லட்சம் விலை.. டாடா காரை போட்டிபோட்டு கொண்டு வாங்கும் இந்தியர்கள்.. என்ன ஸ்பெஷல்?
Recommended image2
20 இன்ச் TV ஓவர்… 300 இன்ச் ப்ரொஜெக்டர் வந்தாச்சு.. விலை இவ்வளவு தானா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved