MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 20 இன்ச் TV ஓவர்… 300 இன்ச் ப்ரொஜெக்டர் வந்தாச்சு.. விலை இவ்வளவு தானா!

20 இன்ச் TV ஓவர்… 300 இன்ச் ப்ரொஜெக்டர் வந்தாச்சு.. விலை இவ்வளவு தானா!

XElectron நிறுவனம் தனது iProjector 3 Plus என்ற புதிய ஸ்மார்ட் புரொஜெக்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆட்டோ ஃபோகஸ், 20W ஸ்பீக்கர்கள் போன்ற அம்சங்களுடன், இது அறிமுக சலுகை விலையில் கிடைக்கிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 11 2026, 10:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
300 இன்ச் திரை கொண்ட ஸ்மார்ட் புரொஜெக்டர்
Image Credit : Google

300 இன்ச் திரை கொண்ட ஸ்மார்ட் புரொஜெக்டர்

வீட்டையே சிறிய திரையரங்கமாக மாற்ற விரும்புபவர்களுக்கு புதிய தேர்வாக XElectron நிறுவனம் தனது iProjector 3 Plus ஸ்மார்ட் புரொஜெக்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் டிவி (Google TV) அடிப்படையிலான இந்த புரொஜெக்டர், 300 இன்ச் வரை திரை அளவை வழங்கும் திறன் கொண்டது. முழு HD தெளிவுடன் 4K ஆதரவு வழங்கப்படுவதால், பெரிய திரை அனுபவத்தை வீட்டிலேயே பெறலாம் என நிறுவனம் கூறுகிறது.

25
4K ஆதரவு புரொஜெக்டர்
Image Credit : Google

4K ஆதரவு புரொஜெக்டர்

திரைத் தரத்தைப் பொருத்தவரை, 1920 x 1080 முழு HD நெட்டிவ் ரெசல்யூஷன் வழங்கப்படுகிறது. 4K UHD ஆதரித்தாலும், வெளியீடு முழு HD ஆக இருக்கும். 2000 ANSI லூமன்ஸ் பிரைட்னஸ் காரணமாக மங்கலான வெளிச்சத்திலும் தெளிவான படத்தை வழங்குவதாக கூறப்படுகிறது. 55 இன்ச் முதல் 300 இன்ச் வரை திரையை ப்ரோஜெக்ட் செய்ய முடியும். சுமார் 23 அடி தூரம் வரை செயல்படும். HDR10 மற்றும் 10000:1 டைனமிக் காண்ட்ராஸ்ட் ரேஷியோ ஆதரவு உள்ளது.

Related Articles

Related image1
விலை ரூ.1,000 தான்.. பட்ஜெட்டில் கலக்கும் சிறந்த கீபேட் போன்கள்.. முழு லிஸ்ட் உள்ளே
Related image2
ஒரு நிமிடத்தில் உங்கள் புகைப்படத்தை.. ஏஐ கேரிகேச்சராக மாற்றலாம்.. ஈசி ஸ்டெப்ஸ் இதோ
35
கூகுள் டிவி வசதி கொண்ட புரொஜெக்டர்
Image Credit : Google

கூகுள் டிவி வசதி கொண்ட புரொஜெக்டர்

கூகுள் டிவி தளத்தின் மூலம் Netflix, Prime Video, YouTube, JioHotstar, Zee5, SonyLIV உள்ளிட்ட பல்வேறு ஓடிடி செயலிகளை நேரடியாகப் பதிவிறக்கம் செய்யலாம். 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், Chromecast, Google Cast, AirPlay மற்றும் Miracast மூலம் வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. குரல் தேடல் வசதியும் உள்ளது.

45
குறைந்த விலை புரொஜெக்டர்
Image Credit : Google

குறைந்த விலை புரொஜெக்டர்

மேலும், ஆட்டோ ஃபோகஸ், ஆட்டோ கீஸ்டன் கரெக்ஷன், ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட் போன்ற தானியங்கி அமைப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 20W டூயல் ஸ்பீக்கர்கள், Wi-Fi 6, புளூடூத் 5.4, HDMI ARC, USB, AV, RJ-45 போன்ற இணைப்பு விருப்பங்களுடன் இது டேபிள், சுவர் அல்லது சீலிங்கில் பொருத்தக்கூடியதாக உள்ளது.

55
ஸ்மார்ட் புரொஜெக்டர் விலை
Image Credit : Google

ஸ்மார்ட் புரொஜெக்டர் விலை

இந்த புரொஜெக்டர் அறிமுக சலுகை விலையில் ரூ.27,990க்கு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மொத்த அதிகபட்ச விலை ரூ.49,999 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. கருப்பு நிறத்தில் இந்த புரொஜெக்டருக்கு ஒரு ஆண்டு உத்தரவாதமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நுட்பக் கருவி
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jiohotstar: வெறும் 100 ரூபாய்க்கு டி20 உலகக்கோப்பை பார்த்து ரசிக்கலாம்.. ஜியோ கிரிக்கெட் பிளான்!
Recommended image2
விலை ரூ.1,000 தான்.. பட்ஜெட்டில் கலக்கும் சிறந்த கீபேட் போன்கள்.. முழு லிஸ்ட் உள்ளே
Recommended image3
பட்ஜெட் விலையில் 5G வேகம்! ரூ.10,000-க்குள் பட்டையைக் கிளப்பும் டாப் 5 போன்கள்!
Related Stories
Recommended image1
விலை ரூ.1,000 தான்.. பட்ஜெட்டில் கலக்கும் சிறந்த கீபேட் போன்கள்.. முழு லிஸ்ட் உள்ளே
Recommended image2
ஒரு நிமிடத்தில் உங்கள் புகைப்படத்தை.. ஏஐ கேரிகேச்சராக மாற்றலாம்.. ஈசி ஸ்டெப்ஸ் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved