- Home
- Auto
- Ather EL01: கம்மி விலையில் அதிக மைலேஜ் தரும் புதிய ஃபேமிலி ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ள ஏத்தர்!
Ather EL01: கம்மி விலையில் அதிக மைலேஜ் தரும் புதிய ஃபேமிலி ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ள ஏத்தர்!
Ather new EV Scooter : ஏத்தர் எனர்ஜி, தனது புதிய ஃபேமிலி ஸ்கூட்டரான EL01-ஐ ஆகஸ்ட் 29 அன்று அறிமுகம் செய்ய உள்ளது. இதன் டீசர் வெளியாகியுள்ள நிலையில், விலை மற்றும் மைலேஜ் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Ather EL01 electric scooter
இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டுகளில் ஒன்றான பெங்களூருவைச் சேர்ந்த ஏத்தர் எனர்ஜி, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்த நிறுவனம். தரம், மைலேஜ், பெர்ஃபாமன்ஸ் என எல்லாவற்றிலும் ஒரு படி மேலே இருக்கும் ஏத்தர், ஸ்போர்ட்ஸ் மாடல்களுக்குப் பிறகு 'Rizta' என்ற ஃபேமிலி ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இப்போது, குடும்பங்களுக்காகவே பிரத்யேகமாக மற்றொரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கப் போகிறது. EL01 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி அறிமுகமாகிறது.
புதிய ஸ்கூட்டரின் விலை என்ன?
ஏத்தர் EL01 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை சுமார் ₹1 லட்சத்தில் இருந்து ₹1.25 லட்சத்திற்குள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சந்தையில் உள்ள ஏத்தர் Rizta ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹1.21 லட்சமாகவும், ஏத்தர் 450 சீரிஸ் ஸ்கூட்டரின் விலை ₹1.28 லட்சமாகவும் உள்ளது.
Ather Voice on Ather: பேசினாலே போதும்.. ஸ்கூட்டரைத் தொடாமலேயே கட்டுப்படுத்தும் ஏதரின் புதிய அம்சம்
புதிய டெக்னாலஜி, அசத்தல் டிசைன்
புதிய டிசைன், புதிய டெக்னாலஜி, மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் சொகுசான பயண அனுபவத்திற்கு இந்த ஸ்கூட்டர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என நிறுவனம் கூறியுள்ளது. இதில் பல புதுமையான அம்சங்கள் இருக்கும். ஹேண்டில்பாரில் பொருத்தப்பட்ட ஹெட்லைட், LED டே டைம் ரன்னிங் லைட், 14 இன்ச் முன்பக்க வீல் மற்றும் 12 இன்ச் பின்பக்க வீல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், நகரச் சாலைகளிலும் மற்ற இடங்களிலும் சிறந்த பேலன்ஸுடன் எளிதாக ஓட்ட முடியும்.
மெட்டல் பாடி பேனல்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய EL01 ஸ்கூட்டர், ஏத்தர் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்கூட்டராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது வரை, ஏத்தர் EL01 ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் மைலேஜ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெறும் ரூ.214க்கு மாதம் முழுவதும் ஓட்டலாம்! Ather Rizta 1 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி அசத்தல்
சாதனை படைக்கப்போகும் ஏத்தர்
மைலேஜ் விஷயத்தில் இந்த ஸ்கூட்டர் ஒரு புதிய சாதனையை படைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஏத்தர் ஸ்கூட்டர்களில் 2kWh முதல் 5kWh வரையிலான பேட்டரி பேக்குகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய மாடலில் எந்த பேட்டரி பேக் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 29 அன்று ஏத்தர் EL01 ஸ்கூட்டருடன், வேறு சில புதிய தயாரிப்புகளையும் ஏத்தர் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கூடுதல் ஆக்சஸரீஸ் உள்ளிட்ட பல தயாரிப்புகளை வெளியிடவும் ஏத்தர் திட்டமிட்டுள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 130 கிமீ போகலாம்: புதிய அப்டேட்களுடன் வெளியானது Ather 450X, 450S

