train: indian railway: ரயில்களில் விற்கப்படும் டீ, காபி, உணவுக்கு சர்வீஸ் சார்ஜ் நீக்கம்: ஆனால்?
உயர் கட்டணம் உள்ள ப்ரீமியம் ரயில்களில் முன்கூட்டியே ஆர்டர் செய்யாமல் வாங்கும் அனைத்து உணவுகள், குடிநீர், டீ, காபி, குளிர்பானங்கள் ஆகியவற்றுக்கு சர்வீஸ் சார்ஜ் நீக்கி ரயில்வே அறிவித்துள்ளது.
உயர் கட்டணம் உள்ள ப்ரீமியம் ரயில்களில் முன்கூட்டியே ஆர்டர் செய்யாமல் வாங்கும் அனைத்து உணவுகள், குடிநீர், டீ, காபி, குளிர்பானங்கள் ஆகியவற்றுக்கு சர்வீஸ் சார்ஜ் நீக்கி ரயில்வே அறிவித்துள்ளது.
அதேநேரம், நொறுக்குத் தீணிகள், மதியஉணவு, இரவு உணவு ஆகியவற்றுக்கு கூடுதலாக ரூ.50 கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளது.
பேட்டரியில் இயங்கும் ஸ்போர்ட் கார் தயாரிப்பில் இறங்குகிறது ஓலா நிறுவனம்
முன்கூட்டியே ஆர்டர் செய்த, ரயிலில் ஏறியின் ஆர்டர் செய்யப்படும் டீ, காபி ஆகியவற்றுக்கு இருக்கும்விலை தொடர்கிறது.
ஐஆர்சிடிசியின் முந்தைய விதியின்படி, ஒருநபர் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது உணவும் முன்பதிவு செய்யாவிட்டால், அவர் பயணத்தின்போது கூடுதலாக ரூ.50 செலுத்தத் தேவையில்லை. டீஅல்லது காபி ரூ.20 விலையில்தான் தரப்படும்.
ஆனால், ப்ரீமியம் ரயில்களான ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ஆகிய ரயில்களில் செல்லும் பயணி உணவுக்கு முன்கூட்டியே ஆர்டர் செய்யாத பயணிகளும், டீ காபிக்கு ரூ.20 செலுத்தினால் போதுமானது. முன்பு, முன்பதிவு செய்யப்படாத டீ, காபி ஆகியவற்றுக்கு சர்வீஸ் கட்டணம் சேர்த்து ரூ.70 செலுத்த வேண்டும்
ஹோட்டல் ரூம்,இனி காஸ்ட்லிதான்! இன்று முதல் 12% ஜிஎஸ்டி வரி அமல்: வரியில்லாத ஹோட்டல் எது?
முன்பு, காலைசிற்றுண்டி ரூ.105, மதிய உணவு ரூ.185, மாலை ஸ்நாக்ஸ் ரூ.90 வசூலி்க்கப்படும். ஆனால்,இப்போது, கூடுதலாகரூ.50 வசூலிக்கப்படுகிறது. இனிமேல், காலை உணவு ரூ.155, மதிய உணவு ரூ.235, ஸ்நாக்ஸ் ரூ.140 என உயர்ந்துள்ளது
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில் “ சர்வீஸ் சார்ஜ் நீக்கம் என்பது, ப்ரீமியம் ரயில்களில் டீ, காபி விலையில் மட்டும்தான் எதிரொலிக்கும். முன்கூட்டியே புக் செய்யாதவரும், புக் செய்தவரும் டீ, காபிக்கு ஒரே விலை கொடுத்தால் போதும். ஆனால், மற்ற உணவுகளுக்கு முன்பதிவு செய்யாமல்இருந்தால் சர்வீஸ் கட்டணம் சேர்க்கப்படும்” எனத் தெரிவித்தார்
இலங்கை மக்கள் நிம்மதிபெருமூச்சு, மகிழ்ச்சி: கடந்த 6 மாதத்தில் முதல்முறையாக அறிவிப்பு