ஹோட்டல், மற்றும் ரெஸ்டாரன்ட்களில் ரூம் வாடகைக்கு எடுத்து தங்கும் பயணிகள் இனிமேல் அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். ரூ.1000 வரை தினசரி வாடகை இருக்கும் அறைகளுக்கு இன்று முதல் 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட உள்ளது.

தங்கும் பயணிகள் இனிமேல் அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். ரூ.1000 வரை தினசரி வாடகை இருக்கும் அறைகளுக்கு இன்று முதல் 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட உள்ளது.

இதற்கு முன் ரூ.1000 வரை தினசரி வாடகை வசூலிக்கப்படும் ஹோட்டல் அறைக்கு ஜிஎஸ்டி வரி இல்லை. சமீபத்தில்ல நடந்து முடிந்த 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ரூ.ஆயிரம்வரை மற்றும் ரூ.7500 வரை தினசரி வாடகை வசூலிக்கும் அறைக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதனால் விடுமுறை காலங்களில் நடுத்தர குடும்பங்கள், உயர்நடுத்தர குடும்பங்கள், சாமானியர்கள் சுற்றுலா தளங்களுக்குச் சென்று ஹோட்டலில் அறை எடுத்து தங்கினால் கூடுதலாக செலவிட வேண்டியதிருக்கும்.

டேக்ஸ்மேன்.காம் தளத்தின் தலைவர் பூனம் ஹரிஜனி கூறுகையில் “ இதுவரை ஹோட்டல்கள், கிளப்புகள், கெஸ்ட்ஹவுஸ், காட்டேஜ், தங்குமிடங்களில் தினசரி ரூ1000 வரை,அல்லதுஆயிரத்துக்கு கீழ் வாடகை வசூலிக்கும் அறைக்கு ஜிஎஸ்டி வரி இல்லாமல் இருந்தது. இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் 12 சதவீதம் வரிவிதிக்க பரிந்துரைத்துள்ளது.

இதன்படி ரூ.7500 வரை தினசரி அறைக்கு வாடகை வசூலிக்கும் ஹோட்டல்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி அமலாகிறது. இனிமேல் சாதாரண ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவது கூட சாமானிய மக்களுக்கு காஸ்ட்லியாக மாறிவிடும்” எனத் தெரிவித்தார்.

இந்த புதிய வரிவிதிப்பின்படி ஹோட்டலில் தினசரி அறைக்கு ரூ.7500 வரை வாடகை வசூலித்தால், அதற்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். ரூ.7501 முதல் அதற்கு அதிகமாக தினசரி வாடகை வசூலித்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும்.

உதாரணாக, புதிய ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன், சமானியர் ஒருவர் ஹோட்டலில் தினசரி ரூ.900க்கு ஒருஅறை எடுத்து 2 நாட்கள் தங்கினால்,அவருக்கு ரூ.1800 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இனிமேல், ரூ.1800+12% ஜிஎஸ்டி வரி,(ரூ.216) என ரூ.2016 கட்டணம் செலுத்த வேண்டும். ஏறக்குறைய ரூ.216 அதிகரித்துள்ளது. ஒரு அறைக்கு ரூ.216 என்றால், பெரிய குடும்பமாக இருந்து, 3 அறை எடுத்து 2 நாட்கள் தங்கினால், ஏறக்குறைய ரூ.642 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

இருப்பினும் சிறிய ஹோட்டல்கள் இன்னும் வரிவிலக்கில்தான் உள்ளன. மிகவும் சிறிய ஹோட்டல்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் வராது. அதாவது ஹோட்டலின் ஆண்டு வருவாய் ரூ.20 லட்சத்துக்கு கீழ் இருந்தால், அந்த ஹோட்டல் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் வராது. அங்கு ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படாது.