ola electric: ola car: பேட்டரியில் இயங்கும் ஸ்போர்ட் கார் தயாரிப்பில் இறங்குகிறது ஓலா நிறுவனம்
விரைவில் எலெக்ட்ரிக் ஸ்போர்ட் கார் தயாரிப்பில் ஓலா நிறுவனம் இறங்க உள்ளது என்று அந்தநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
விரைவில் எலெக்ட்ரிக் ஸ்போர்ட் கார் தயாரிப்பில் ஓலா நிறுவனம் இறங்க உள்ளது என்று அந்தநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஓலா சிஇஓ பாவேஷ் அகர்வால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்தியாவில் இதுவரை யாரும் இருவாக்காத பேட்டரி ஸ்போர்ட் காரை நாங்கள் தயாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
ஓலா நிறுவனத்தின் அன்றாடப் பணிகளில் இருந்து சமீபத்தில் ஒதுங்கிய பாவேஷ் அகர்வால், பொறியியல் செயல்பாடு, குழுகட்டமைப்பு, உற்பத்தி, நீண்டகாலத் திட்டங்கள் அதாவது, இரு சக்கர வாகனங்களை பல வகைகளில் தயாரித்தல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார்.
கிரிப்டோகரன்சியை தடை செய்ய ரிசர்வ் வங்கி விரும்புகிறது: நிர்மலா சீதாராமன் அதிர்ச்சித் தகவல்
புனே நகரில் ஒலா நிறுவனத்தின் தொழில்நுட்ப மையமும், பிரிட்டனில் ஆய்வு நிறுவனத்தையும் பவேஷ் அகர்வால் தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒருநிகழ்ச்சியில் பாவேஷ் அகர்வால் அளித்த பேட்டியில், “அடுத்த 2 ஆண்டுகளில் எங்களிடம் இருந்து அதிகமான இரு சக்கர வாகனங்களை வெளியிடுவோம். ஸ்கூட்டர் பிரிவில் அடுத்தடுத்து புதிய மாடல்களையும், மோட்டார் சைக்கிள்கள், செடான், எஸ்யுவி வகை கார்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
2022ம் ஆண்டுக்குள் புதிய ஸ்கூட்டர்களையும், ஸ்போர்ட் பைக்குகளையும் அறிமுகப்படுத்துவோம். 2024ம் ஆண்டுக்குள் ப்ரீமியம் எஸ்யுவி கார்களையும், ப்ரீமியம் செடான் வகைக் கார்களையும்அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
:சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.30 குறைப்பு: அதானி வில்மர் அதிரடி
பேட்டரி தொழில்நுட்பம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 10 கோடி டாலர்களை ஓலா நிறுவனம் இதுவரை முதலீடு செய்துள்ளது. ஏற்ககுறைய 200 ஆய்வாளர்கள் பணியில் உள்ளனர், முனைவர் பட்டம் பெற்ற 500 பேரை பணிக்கு அமர்த்தவும் திட்டமிட்டுள்ளோம்.
தொழில்நுட்ப தலைமை அலுவலகம் பெங்களூருவிலும், ஆய்வு மையங்கள் புனே, ஜப்பான், சான்பிரான்சிஸ்கோ, பிரிட்டனிலும் அமைக்க உள்ளோம்.
தற்போது ஒரு கிலோவாட் பேட்டரி செல்லை உருவாக்க 150 டாலர் செலவிடுகிறோம். இதை 100 டாலராக குறைக்க இருக்கிறோம். அடுத்த சில மாதங்களில் வாகன உற்பத்திச் செலவு 20 சதவீதம் வரை குறையும்” எனத் தெரிவித்தார்.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ்(BEL) பங்கு மதிப்பு 6% உயர்வு:லாபம் 15 மடங்கு உயர்வால் உற்சாகம்
இதற்கிடையே ஒலா நிறுவனம் உருவாக்கியுள்ள எஸ்1ரக ஸ்கூட்டர்களின் மூவ்ஓஸ்3 சாப்ட்வேர் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்டவாகனங்கள் குறித்த திட்டங்களையும் ஓலா சனிக்கிழமை வெளியிட்டது. வரும் தீபாவளிப் பண்டிகைக்குள் மூவ்ஓஎஸ்3 அறிமுகமாகும்.