அதானி குழுமத்தின் அதானி வில்மர் நிறுவனம் பார்ச்சூன் சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.30 வரை குறைத்து இன்று அறிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் அதானி வில்மர் நிறுவனம் பார்ச்சூன் சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.30 வரை குறைத்து இன்று அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதையடுத்து, அந்தப் பலன்களை வாடிக்கையாளர்களுக்க வழங்கியுள்ளது. அதிகபட்சமாக சோயாபீன் எண்ணெய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்டாக்குகள் சந்தைக்கு வரும்போது, இந்த விலைக் குறைப்பு பொருந்தும்.
கடந்த 7ம் தேதி, மதர்டெய்ரி நிறுவனம் தான் தயாரிக்கும், சோயாபீன் எண்ணெய் மற்றும் ரைஸ்பிரான் எண்ணெய் விலையைலிட்டருக்கு ரூ.15 வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை மக்கள் நிம்மதிபெருமூச்சு, மகிழ்ச்சி: கடந்த 6 மாதத்தில் முதல்முறையாக அறிவிப்பு

இதற்கிடைய கடந்த 6ம் தேதி, சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள், சுத்திகரிப்பாளர்களுடன் மத்திய உணவுத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. அப்போது, முன்னணி சமையல் எண்ணெய் நிறுவனங்கள், விலையை லிட்டருக்கு ரூ.15 வரை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது

ஹோட்டல் ரூம்,இனி காஸ்ட்லிதான்! இன்று முதல் 12% ஜிஎஸ்டி வரி அமல்: வரியில்லாத ஹோட்டல் எது?

அதானி வில்மர் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் “ சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்ததையடுத்தும், அரசின் முயற்சியாலும், விலைக் குறைப்பின் பலன்களைவாடிக்கையாளர்களுக்கு வழ்குகிறோம். சமையல் எண்ணெய் விலையைக் குறைக்கிறோம். 

பார்ச்சூன் சோயா எண்ணெய் விலை லி்ட்டர் ரூ.195 லிருந்து ரூ.165 ஆகக் குறைக்கப்படுகிறது.

சூரிய காந்தி எண்ணெய், லிட்டர் ரூ.210லிருந்து ரூ.199ஆகக் குறைக்கப்படுகிறது.

கடுகு எண்ணெய் விலை லிட்டர் ரூ.195லிருந்து, 190ரூபாயாகக் குறைக்கப்படுகிறது. 

பார்ச்சூன் ரைஸ்பிரான் ஆயில் விலை லிட்டர் ரூ.225லிருந்து, ரூ.210ஆகக் குறைக்கப்படுகிறது.

ராக்வனஸ்பதி விலை கிலோ ரூ.200லிருந்து, ரூ.185ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ராக் பாமாயில் எண்ணெய் விலை, லிட்டர் 170ரூபாயிலிருந்து ரூ.144ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்டாக்குகள் சந்தைக்கு வரும்போது இந்த விலைக் குறைப்பு அமலாகும். அடுத்துவரும் பண்டிகை காலத்தில் எங்கள் நிறுவனப் பொருட்களின் விற்பனை விலைகுறைப்பால் அதிகரிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 % ஜிஎஸ்டி வரி பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் பொருந்துமா? சிபிஐசி விளக்கம்

அதானி வில்மர் நிறுவனம் சார்பில் சமையல் எண்ணெய், அரிசி, ஆட்டா, சர்க்கரை, பீஸன், கிச்சடி, சோயா பொருட்கள், உளளிட்டவை விற்கப்படுகின்றன