5 % ஜிஎஸ்டி வரி பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் பொருந்துமா? சிபிஐசி விளக்கம்

ப்ரீ பேக்கிங் செய்யப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு பொருந்துமா என்பது குறித்து மத்திய மறைமுகவரிகள் வாரியம்(சிபிஐசி) விளக்கம் அளித்துள்ளது.

5 % GST: FAQs on GST applicability on pre-packaged goods: CBIC clarifies

ப்ரீ பேக்கிங் செய்யப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு பொருந்துமா என்பது குறித்து மத்திய மறைமுகவரிகள் வாரியம்(சிபிஐசி) விளக்கம் அளித்துள்ளது.

47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இந்த மாதத் தொடக்கத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, விரிவிதிப்புக்குள் வராத பல பொருட்களுக்கு புதிதாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டது.

குறிப்பாக பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும், லேபிள் ஒட்டப்பட்ட உணவுப் பொருட்களான  பால், தயிர், பனீர், மோர், லஸ்ஸி, அரிசி, கோதுமை, கோதுமை மாவு ஆகியவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.இந்த புதியவரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

5 % GST: FAQs on GST applicability on pre-packaged goods: CBIC clarifies

இதில் லேபிள் மற்றும் பிராண்டட் பொருட்களுக்கு மட்டும்தான் ஜிஎஸ்டி வரியா அல்லது மற்றவற்றுக்கும் ஜிஎஸ்டி வரியா என்பது குறித்து குழப்பம் நிலவியது அது குறித்து மத்திய மறைமுக வரிகள் நேரடி வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது

ப்ரீபேக்கிங் செய்யப்பட்ட 25 கிலோ அல்லது 25 லி்ட்டருக்கு உட்பட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். ஆனால் சில்லறை விற்பனையாளர், உற்பத்தியாளர் அல்லது விநியோகஸ்தரிடம் இருந்து வாங்கும் பொருளை 25 கிலோ சில்லரையில் வழங்கினால், நுகர்வோருக்கு விற்பனை செய்யும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது.

ப்ரீ பேக்கிங் செய்யப்பட்ட, லபிள் உணவுப் பொருட்களான பருப்பு வகைகள், அரிசி, கோதுமை, கோதுமை மாவு, உள்ளிட்ட மாவுப் பொருட்கள் 25 கிலோவுக்குள் இருந்தால், அவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்

5 % GST: FAQs on GST applicability on pre-packaged goods: CBIC clarifies

அதேநேரம், இந்த உணவுப் பொருட்கள் ஒரே பேக்கிங்காக, 25 கிலோவுக்கு அல்லது 25 லிட்டருக்கு அதிகமாக இருந்தால், அவற்றுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது.

முன்பே பேக்கிங் செய்யப்பட்ட 25 எடை அல்லது அதற்கு குறைவான எடையுள்ள கோதுமை மாவு, அரிசி மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5சதவீதம் வரி உண்டு. ஆனால், 30 கிலோ பேக்கிங்காக இருந்தால் ஜிஎஸ்டி வரி இல்லை.

ஒருவேளை நுகர்வோர் ஒருவர் 10 கிலோ அரிசி பேக்கிங்காக, 3 வாங்கினால், அதாவது 3 பத்துகிலோ மூட்டையாக 30 கிலோ வாங்கினாலும், ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். ஏனென்றால், தனித்தனியாக 10கிலோ பேக்கிங்காக வாங்கியதால், 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி உண்டு.

ஒருவேளை ஒவ்வொரு 10 கிலோ பேக்கிங்கையும், 100 கிலோவாக மாற்றி பெரிய பேக்கிங்காக மாற்றினாலும், ஜிஎஸ்டி வரி உண்டு. இதுபோன்ற பேக்கிங் பொருட்கள் உற்பத்தியாளரிடம் இருந்து பகிர்வாளருக்கு வழங்கப்படுகிறது. 10 கிலோ பேக்கிங் என்றாலே 25 கிலோவுக்கு உள்பட்டு வந்துவிடுவதால், 5 சதவீதம்வரி உண்டு.

5 % GST: FAQs on GST applicability on pre-packaged goods: CBIC clarifies

அதேசமயம் விருந்து, விசேஷங்கள், பண்டிகைகளுக்காக 50 கிலோ அரிசி மூடையாக, கோதுமை மூடையாக வாங்கினால், ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது. 25 கிலோ அல்லது 25 லிட்டர் கொண்ட ப்ரீ பேக்கிங் செய்யப்பட்ட, லேபிள்ட் உணவுப் பொருட்களுக்கு மட்டும்தான் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் வரும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios