Asianet News TamilAsianet News Tamil

ஒரு நாளைக்கு ரூ. 30 லட்சம்.. ரத்தன் டாடா குழுமத்தில் அதிக சம்பளம் வாங்கும் தமிழர்..

ர். டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலக ரத்தன் டாடா முடிவு செய்தபோது, டாடா சன்ஸ் தலைவராக தனது மிகவும் நம்பிக்கைக்குரிய நபரான என் சந்திரசேகரனை நியமித்தார்.

Highest paid employee of rathan tata led group, earns rs 30 lakhs per day who is tamilian
Author
First Published Jul 18, 2023, 3:44 PM IST | Last Updated Jul 18, 2023, 3:45 PM IST

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா இந்தியாவின் வெற்றிகரமான தொழிலதிபர்களில் ஒருவராக உள்ளார், மேலும் டாடா குழுமத்தின் மாபெரும் வெற்றியில் ரத்தன் டாடா முக்கிய பங்கு வகித்துள்ளார். டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து விலக ரத்தன் டாடா முடிவு செய்தபோது, டாடா சன்ஸ் தலைவராக தனது மிகவும் நம்பிக்கைக்குரிய நபரான என் சந்திரசேகரனை நியமித்தார்.

யார் இந்த என் சந்திரசேகரன்?

தமிழகத்தை சேர்ந்த என் சந்திரசேகரன் டாடா குழுமத்தின் முக்கியமான நபர்.ஏனெனில் அவர் டிசிஎஸ் நிறுவனத்தில் பயிற்சியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். வணிக வட்டாரங்களில் என் சந்திரசேகரன் சந்திரா என்று அழைக்கப்படுகிறார். அவர் 2017-ம் ஆண்டில் டாடா சன்ஸ் தலைவராக ஆனார். நாமக்கல் மோகனூரில் 1963 ஆம் ஆண்டு பிறந்த என் சந்திரசேகரன் அரசுப் பள்ளியில் படித்தார். அவரின் தந்தை விவசாயம் செய்து வந்தார். கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் அப்ளைடு சயின்ஸில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். என் சந்திரசேகரன் திருச்சியில் உள்ள ரீஜினல் பொறியியல் கல்லூரியில் எம்சிஏ முடித்தார்.

1987 ஆம் ஆண்டில், என் சந்திரசேகரன் டிசிஎஸ்-ல் பயிற்சியாளராகச் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறிய அவர், செப்டம்பர் 2007ல் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியானார். அக்டோபர் 2009-ல், என் சந்திரசேகரன் டிசிஎஸ் இன் தலைமை நிர்வாக அதிகாரியானார். அப்போது அவருக்கு வயது 46. 2019-ம் ஆண்டு என் சந்திரசேகரனின் சம்பளம் ரூ.65 கோடி. 2021-2022 ஆம் ஆண்டில், என் சந்திரசேகரன் 109 கோடி ரூபாய் பேக்கேஜை பெற்றார்.

2020 ஆம் ஆண்டில், என் சந்திரசேகரன் மும்பையில் 98 கோடி ரூபாய் மதிப்புள்ள டூப்ளக்ஸ் பிளாட் ஒன்றை வாங்கினார். முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் இல்லமான ஆண்டிலியா அமைந்துள்ள அதே பகுதியில் இந்த பிளாட் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக ஊடக வெளிச்சத்தை விரும்பாதவர் என் சந்திரசேகரன், சில வாரங்களுக்கு முன்பு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான 'Working: What We Do All Day' என்ற ஆவணப்படத்தில் தோன்றினார். அந்த நிகழ்ச்சியில் தனது தனிப்பட்ட வாழ்க்கையின் சில அதிகம் வெளிவராத தகவல்களை தெரிவித்தார். சிறு வயதில் தனது தந்தையுடன் விவசாயம் செய்ய உதவியதாகவும் , ஆனால் தான் விவசாய பணிகளை 'ரசிக்கவில்லை' என்றும், அதை விட்டுவிட்டு வேறு இடத்தில் தனது தொழிலைத் தொடர முடிவு செய்ததாகவும் தெரிவித்தார்.

ரிலையன்ஸ் குழுமத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள PMS பிரசாத்.. அவரின் சம்பளம் இத்தனை கோடியா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios