ரிலையன்ஸ் குழுமத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள PMS பிரசாத்.. அவரின் சம்பளம் இத்தனை கோடியா?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், அந்நிறுவனத்தின் பல்வேறு அம்சங்களை வழிநடத்தும் வணிகத் தலைவர்களின் முக்கிய குழுவில் ஒருவராகவும் உள்ளார்
புத்திசாலித்தனம் மட்டுமல்ல, விசுவாசம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரிய நிறுவனங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நாட்டின் பெரும்பணகாரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நபராக அறியப்படுபவர் தான் பிஎம்எஸ் பிரசாத், ரிலையன்ஸ் குழுமத்தின் மூத்த ஊழியர்களில் ஒருவராகவும், முகேஷ் அம்பானியின் மிகவும் நம்பகமான பிரதிநிதிகளில் ஒருவராகவும் PMS பிரசாத் இருக்கிறார்.. மேலும் ரிலையன்ஸ் குழுமத்தின் குழுவின் செயல்பாட்டுப் படிநிலையில் முக்கியமான ஊழியராகவும் அறியப்படுகிறார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், அந்நிறுவனத்தின் பல்வேறு அம்சங்களை வழிநடத்தும் வணிகத் தலைவர்களின் முக்கிய குழுவில் ஒருவராகவும் உள்ளார். கல்வித் தகுதியின் அடிப்படையில் பொறியாளரான PMS பிரசாத், ரிலையன்ஸ் நிறுவனர் மற்றும் பழம்பெரும் தொழிலதிபர் திருபாய் அம்பானி காலத்திலேயே அவர் அந்நிறுவனத்தில் இணைந்தார். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த குண்டூரைச் சேர்ந்த பிரசாத், ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட குழுவில் தனது 40 ஆண்டுகால தொழில் வாழ்க்கையில் பல்வேறு தலைமைப் பாத்திரங்களில் பணியாற்றியுள்ளார்.
பிரசாத்திற்கு சிஇஓ பதவி உயர்வு அளித்தவர் முகேஷ் அம்பானி தான். குஜராத்தின் ஜாம்நகரில் குழுமத்தின் முதன்மையான பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையை நிறுவிய குழுவிற்கு பிரசாத் தலைமை தாங்கினார். ரிலையன்ஸ் ஜியோவின் வெற்றிகரமான மற்றும் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் வெளியீட்டிற்கு பிரசாத் முக்கியமானவர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள இயக்குநர்கள் குழு பட்டியலில், முகேஷ் அம்பானி, மனைவி நீதா அம்பானி மற்றும் மருமகன்கள் ஹிட்டல் மற்றும் நிகில் மேஸ்வானி ஆகியோருக்குப் பிறகு PMS பிரசாத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவர் 2009 ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் செயல் இயக்குநராக உள்ளார். Network18 Media & Investments Limited, TV 18 Broadcast Limited, Reliance BP Mobility Limited, Viacom 18 Media Private Limited மற்றும் Reliance Commercial Dealers Limited உள்ளிட்ட பல்வேறு அம்பானி நிறுவனங்களின் இயக்குநராக அவர் பணியாற்றுகிறார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் அறிக்கையின் படி, பிரசாத் நிறுவனத்தின் மொத்த ஊதியம் ரூ.11.89 கோடியாகும். இதன் மூலம் மூன்றாவது அதிக ஊதியம் பெறும் நிர்வாக இயக்குநராக இருந்தார். தலா 24 கோடி பெற்ற நிகில் மற்றும் ஹிடல் மேஸ்வானிக்கு பின்னால் அவர் நிற்கிறார். 22ஆம் நிதியாண்டில் ரூ.11.51 கோடியைப் பெற்று, சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள் அடிப்படையில் பிரசாத் அதிக ஊதியம் பெறும் ஊழியராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.