Asianet News TamilAsianet News Tamil

WEF Davos:2023-ல் உலகப் பொருளாதார மந்தநிலை; இந்தியாவுக்கு சாதகம்: உலக பொருளாதார மன்ற சர்வேயில் தகவல்

2023ம் ஆண்டில் உலகளவில் பொருளாதார மந்தநிலை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன, உணவு, கச்சா எண்ணெய் விலை, பணவீக்கம் கடுமையாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தாவோஸ் நகரில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றத்தின் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

global recession is likely in 2023, and India may benefit from supply chain diversification:WEF
Author
First Published Jan 17, 2023, 10:31 AM IST

2023ம் ஆண்டில் உலகளவில் பொருளாதார மந்தநிலை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன, உணவு, கச்சா எண்ணெய் விலை, பணவீக்கம் கடுமையாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தாவோஸ் நகரில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றத்தின் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த உலகப் பொருளாதார மந்தநிலையால் ஆசியப் பிராந்தியத்தில் உள்ள இந்தியா, வங்கதேசம் நாடுகளுக்கு சாதகமாக அமையும். ஏனென்றால், இந்த நாடுகள் சீனாவிலிருந்து விலகி, தங்களின் உற்பத்தி சப்ளையை பல்வகைப்படுத்தியிருப்பதால் நன்மையாகவே அமையும் எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 40% சொத்துக்களை வைத்திருக்கும் 1% பணக்காரார்கள்; அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட ஆக்ஸ்பாம்!!

ஸ்விட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்ற ஆண்டுக் கூட்டம் நேற்று தொடங்கி நடந்து  வருகிறது. இந்தக் கூட்டத்தில் பொருளாதார மன்றத்தின் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அது குறித்து உலகப் பொருளாதார மன்றத்தின் இயக்குநர் சாதியா ஜாஹிதி கூறியிருப்பதாவது:

பொருளாதார சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு நிறுவனங்கள் தங்கள் செலவை குறிப்பிடத்தகுந்த அளவில் 2023ம் ஆண்டில் குறைக்கும். ஆனால், பணவீக்கம், மற்றும் நிறுவனங்களின் வரவு செலவு அறிக்கை அந்தநிறுவனங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் நிலவும் புவி அரசியல் சூழல், பதற்றநிலை பொருளாதாரத்தை ஒருவடிவத்துக்கு கொண்டு வரும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டும், மேலும் நிதிக்கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

உலகப் பொருளாதார வளர்ச்சி குறையும்: 73 சதவீத சிஇஓ-க்கள் எதிர்பார்ப்பு

இந்த சர்வேயில் பங்கேற்ற பொருளாதார வல்லுநர்களில் மூன்றில்இரு பங்கு, 2023ம் ஆண்டில் பொருளாதார மந்தநிலை வரக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். இதில் 18 சதவீதம் பேர், பொருளாதார மந்தநிலை கடுமையாக இருக்காது லேசாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு பகுதி பொருளாதார ஆய்வாளர்கள், பொருளாதார மந்தநிலை இந்த ஆண்டு வருவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் 2023ம் ஆண்டில் அமெரிக்காவ, ஐரோப்பிய நாடுகளில் பொருளதார மந்தநிலை வருவதற்கு வலுவான வாய்ப்புகள், காரணிகள் இருப்பதாக சர்வேயில் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் 2023ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி பலவீனமாக இருக்கும், அமெரிக்காவிலும் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கும் என 91 சதவீத பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சீனாவில் பொருளாதார வளர்ச்சி மோசமாக இருக்கும் என்று ஒரு தரப்பு பொருளாதார வல்லுர்களும், பொருளாதார வளர்ச்சி பாதிக்காது என ஒருதரப்பு பொருளாதார வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர்

2023ம்ஆ ண்டில் பணவீக்கம் சீனாவில் 5 சதவீதமும், ஐரோப்பிய நாடுகளில் 53 சதவீதம் வரை இருக்கும் என பொருளதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். உயர்ந்த பணவீக்கும், குறைவான பொருளாதார வளர்ச்சி, அதிக கடன், சுற்றுச்சூழல், புவிஅரசியல் பதற்றம், முதலீட்டு பற்றாக்குறை ஆகியவற்றால் 2023ம் ஆண்டில் உலகில் பொருளாதார மந்தநிலை பரவலாக வரக்கூடும் என்ற பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்

மொத்த விலை பணவீக்கம் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்தது

இருப்பினும் இந்த உலகப் பொருளாதார மந்தநிலையால் ஆசியப் பிராந்தியத்தில் உள்ள இந்தியா, வங்கதேசம் நாடுகளுக்கு சாதகமாக அமையும். ஏனென்றால், இந்த நாடுகள் சீனாவிலிருந்து விலகி, தங்களின் உற்பத்தி சப்ளையை பல்வகைப்படுத்தியிருப்பதால் நன்மையாகவே அமையும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

Follow Us:
Download App:
  • android
  • ios