EPFO Benefits : பிஎஃப் திட்டத்தில் இத்தனை நன்மைகள் இருக்கா? பல ஊழியர்களுக்கும் தெரியாத தகவல்கள்..
பலருக்கும் தெரியாத பிஎஃப் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிஎஃப் என்பது ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையாகும். நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட தொகையும், பணியாளர் சார்பில் குறிப்பிட்ட தொகையும் மாதம் மாதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதன்படி 12% வரை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த தொகையை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இந்த சமூக நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஓய்வு காலத்தில் பெறும் ஓய்வூதிய நன்மைகள் தவிர பல்வேறு நன்மைகள் பிஃப் மூலம் ஊழியர்களுக்கு கிடைக்கின்றன. எனினும் இதுபற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. எனவே பலருக்கும் தெரியாத பிஎஃப் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஓய்வூதிய பலன்:
வருங்கால வைப்பு நிதியின் கீழ், உங்கள் பணம் இரண்டு பகுதிகளாக டெபாசிட் செய்யப்படுகிறது - EPF அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் EPS அதாவது ஊழியர் ஓய்வூதியத் திட்டம். உங்கள் சம்பளத்தில் கழிக்கப்படும் 12 சதவீதம் உங்கள் நிறுவனத்தால் செலுத்தப்படுகிறது. ஓய்வூதிய நிதி நிறுவனத்தின் பங்களிப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், ஓய்வூதியத்திற்கான தகுதியானது 58 வயதிற்குப் பிறகுதான் தொடங்கும். மேலும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை 1,000 ரூபாய் ஆகும்.
நாமினி பலன்
பிஎஃப் சந்தாதாரர்களை தங்கள் நாமினியை பரிந்துரைக்குமாறு EPFO பலமுறை கேட்டுக் கொண்டுள்ளது. உங்கள் EPF கணக்கிலிருந்து யாரையும் நாமினியாக நியமிக்கலாம். அதன்படி சந்தாதாரர் இறந்தவுடன், நாமினிக்கு பிஎஃப் பணம் கிடைக்கும். இதன் மூலம் பிஎஃப் சந்தாதாரர் இல்லை என்றாலும் அவரின் குடும்பத்திற்கு தொடர்ந்து நன்மை கிடைக்கும்.
ஒரு நாளைக்கு ரூ.50 மட்டும் போதும்.. ரூ.35 லட்சம் கிடைக்கும் போஸ்ட் ஆபிஸ் திட்டம் தெரியுமா.?
VPF-ல் முதலீடு செய்யவும்
EPF தவிர, VPF அதாவது தன்னார்வ வருங்கால வைப்பு நிதியிலும் ஊழியர்கள் முதலீடு செய்யலாம். VPF இல் உங்கள் அடிப்படை சம்பளத்தில் இருந்து கூடுதல் பங்களிப்பைச் செய்யலாம். இதன் மூலம் கூடுதல் நன்மை கிடைக்கும்.
பணம் எடுப்பதற்கான விதிகள்
EPFல் இருந்து பணம் எடுக்க பல விதிகள் உள்ளன. நீங்கள் உங்கள் வேலையை மாற்றினால், உங்கள் EPF கணக்கிலிருந்து எளிதாக பணத்தை எடுக்கலாம் என்றால் நீங்கள் நினைத்தால் நிச்சயம் முடியாது. வேலையை விட்டு நின்று, இரண்டு மாதங்கள் வேறு வேலையில் சேரவில்லை என்றால் பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். அதே போல் உங்களுக்கு புதிய வேலை கிடைக்கும் போது மட்டுமே பணத்தையும் மாற்ற முடியும்.
பகுதியளவு பணத்தை திரும்பப் பெறுதல்
இது தவிர, பிஎஃப் பணத்தில் பகுதியளவு பணத்தை எடுப்பதற்கும், பல வித்தியாசமான விதிகள் உள்ளன. நீங்கள் முழுத் தொகையையும் திரும்பப் பெற முடியாது, ஆனால் கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை பணத்தை எடுக்கலாம். அதாவது அவசர தேவைகள், உங்கள் குழந்தைகளின் திருமணம் அல்லது கல்விக்காகவும் நீங்கள் பணத்தை எடுக்கலாம், ஆனால் கணக்கைத் தொடங்கி 7 ஆண்டுகளுக்குப் பிறகு, 50 சதவீதத் தொகையை மட்டுமே திரும்பப் பெற முடியும். உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு பெரிய அறுவை சிகிச்சை அல்லது சிகிச்சைக்காகவும் பணத்தை எடுக்கலாம். அதே போல், வீட்டுக் கடனை அடைக்க, வீடு கட்ட அல்லது வாங்க. அல்லது வீட்டைப் புதுப்பிக்கவும் பணம் எடுக்கலாம்.
பேங்க், போஸ்ட் ஆபீஸ், பிபிஎஃப்... எதில் அதிக வட்டி கிடைக்கும்? லாபத்தைப் பெருக்கும் வழி என்ன?
EPF மீதான வட்டி
நீங்கள் பிஎஃப் தொகையில் ஒவ்வொரு ஆண்டும் வட்டியை பெறலாம். பிஎஃப் வட்டி ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசால் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அரசாங்கம் 8.15% என்ற விகிதத்தில் EPF-க்கான வருடாந்திர வட்டியை உங்களுக்கு வழங்குகிறது. இதில் கூடுதல் வருமானம் எதுவும் கிடைக்காது. உங்கள் பிஎஃப் கணக்கில் செலுத்தப்படும் தொகை மட்டுமே வட்டியுடன் சேர்ந்து கிடைக்கும்.
ஆயுள் காப்பீடு
ஒரு நிறுவனத்தில் ஆயுள் காப்பீட்டுப் பலன் இல்லை என்றால், அதன் ஊழியர்களுக்கு EDLI (ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு) திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பீடு வழங்கப்படலாம். இருப்பினும், இதில் குறைவான கவரேஜ் மட்டும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- epf benefits after death in tamil
- epf benefits for employees in tamil
- epf benefits in tamil
- epf interest calculation in tamil
- epf latest news in tamil today
- epfo in tamil
- epfo latest news in tamil
- how to calculate pf interest in tamil
- in tamil
- latest tamil news
- live news in tamil
- savings tips in tamil
- tamil
- tamil live news
- tamil news
- today headlines in tamil
- today headlines news in tamil