வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.36.50 குறைந்து ரூ.2,141க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.36.50 குறைந்து ரூ.2,141க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை.

சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. 

இதையும் படிங்க;- இனிமேலாவது குறையுமா! டிசம்பர் 1ம் தேதி முதல் சிகிரெட் பாக்கெட்டில் புதிய படம், எச்சரிக்கை

இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைந்துள்ளது. 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.36.50 குறைந்துள்ளது. இதனால் அதன் விலை ரூ.2,177.50ல் இருந்து ரூ.2,141 ஆக குறைந்தது.

அதேநேரத்தில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1068.50 என்ற விலையிலேயே நீடிக்கிறது. கடந்த மே 19ம் தேதிக்கு பின்னர் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 4வது குறையாக குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- indian railways: மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில்வே டிக்கெட்டில் சலுகை: ஆனால்…!