Asianet News TamilAsianet News Tamil

இனிமேலாவது குறையுமா! டிசம்பர் 1ம் தேதி முதல் சிகிரெட் பாக்கெட்டில் புதிய படம், எச்சரிக்கை

வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் சிகரெட் பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கைப் படமும், புதிய எச்சரிக்கை வாசகமும் இடம் பெறும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

From December 1, tobacco packs will have a new design and a health warning.
Author
New Delhi, First Published Jul 29, 2022, 1:44 PM IST

வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் சிகரெட் பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கைப் படமும், புதிய எச்சரிக்கை வாசகமும் இடம் பெறும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சிகிரெட் புகைத்தால் இளம் வயதிலேயே வேதனையான மரணம் வரும் என்ற வாசகம் இடம் பெற உள்ளது.

கர்நாடகவை பதறவைக்கும் அடுத்தடுத்த 3 கொலைகள்: என்ன நடக்கிறது? அடுத்த ஆண்டு தேர்தலில் பாஜக வெல்லுமா?

From December 1, tobacco packs will have a new design and a health warning.

இந்த எச்சரிக்கைப் படம் அடுத்த ஓர் ஆண்டுக்குக்கு செல்லுபடியாகும் எனத் தெரிவித்துள்ளது.
புகையில் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், அல்லது 2023, டிசம்பர் மாதத்தக்குப்பின் பேக்கிங் செய்யும் பொருட்களில் இந்த படமும், உடல்நலன் தொடர்பான எச்சரிக்கை வாசகமும் இடம் பெற வேண்டும். புகையிலை பயன்படுத்தினால், இளம் வயதிலேயே மரணத்தை எட்டக்கூடும்  என்று எச்சரிக்கை வாசகத்தில் இருக்கும்

இதற்காக மத்திய அரசு சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் விதிகள் 2008ல் கடந்த 21ம்தேதிதிருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன்படி இந்தச் சட்டத்தில் செய்யப்படும் 3-வது திருத்தம் இதுவாகும், 2022, டிசம்பர் 1ம்தேதி முதல் இது அமலுக்கு வரும்.

தடைகளை எல்லாம் வாய்ப்புகளாக மாற்றி இந்தியா முன்னேறி வருகிறது - பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

From December 1, tobacco packs will have a new design and a health warning.

இதறக்கான அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 19 மொழிகளில் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. http://www.mohfw.gov.in"www.mohfw.gov.in and http://ntcp.nhp.gov.in"ntcp.nhp.gov.in என்ற இணையதளத்தில் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் விரிவான விளக்கத்தை அறியலாம்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில்” சிகிரெட் உற்பத்தி, புகையிலை உற்பத்தி, சப்ளை, இறக்குமதி, பகிர்மானம் ஆகியவற்றில் யார் ஒருவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருந்தாலும்,  அனைத்து புகையிலைப் பொருட்களிலும் குறிப்பிட்ட எச்சரிக்கை வாசகம் இருப்பதைஉறுதி செய்ய வேண்டும். 

விறகு எடுக்கச் சென்ற பெண்ணுக்கு கூரையைப் பிய்த்து கொட்டிய அதிர்ஷ்டம்: என்ன அது?

இந்த விதிமுறைகளை மீறுவது குற்றமாகும். சிகரெட் மற்றும் புகையிலை சட்டம் பிரிவில் 20ன் கீழ் அபராதம் மற்றும் சிறை செல்லக்கூடிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படும்” எனத்தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios