Asianet News TamilAsianet News Tamil

diamond price: விறகு எடுக்கச் சென்ற பெண்ணுக்கு கூரையைப் பிய்த்து கொட்டிய அதிர்ஷ்டம்: என்ன அது?

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பன்னா மாவட்டத்தில், காட்டில் விறகு எடுக்கச் சென்ற பெண்ணுக்கு ரூ.20 லட்சத்தில் வைரக் கல் கிடைத்துள்ளது.

A poor woman finds a raw diamond while gathering firewood in the Panna forest, as luck smiles on her.
Author
Bhopal, First Published Jul 29, 2022, 11:58 AM IST

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பன்னா மாவட்டத்தில், காட்டில் விறகு எடுக்கச் சென்ற பெண்ணுக்கு ரூ.20 லட்சத்தில் வைரக் கல் கிடைத்துள்ளது.

அரசாங்க மதிப்பீட்டின்படி அந்த வைரக் கல் 4.39 காரட் மதிப்பாகும், இதன் சந்தை மதிப்பு ரூ20 லட்சத்துக்கு அதிகமாகும்.

பன்னா மாவட்டத்திலிருந்து 53 கிமீ தொலைவில் புருஷோத்தம்பூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஜென்டா பாய் என்ற பெண் கூலி வேலை செய்தும், காட்டில் விறகு எடுத்து விற்பனை செய்தும் வாழ்ந்து வருகிறார். 

இலவசமாக 23 ஆயிரம் உயர்கல்விப் பாடப் பிரிவுகள்: யுஜிசி புதிய அறிவிப்பு

இந்நிலையில், கடந்த புதன்கிழமை ஜென்டா பாய் வழக்கம் போல் காட்டில் விறகு எடுக்கச் சென்றார். அப்போது,காட்டில் ஏதோ ஒரு கல் மின்னுவது போன்று இருந்தது. இதைப் பார்த்த ஜென்டா பாய் அந்த கல்லை எடுத்துக்கொண்டார். 

விறகு எடுத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியதும், அந்தக் கல்லை தனது கணவரிடம் ஜென்டா பாய் காண்பித்தார். இந்தக் கல்லைப் பார்த்த ஜென்டா பாய் கணவர், இது வைரம் போல் இருப்பதால், அரசாங்கத்திடம் அளிக்கலாம் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, பன்னா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வைர ஆய்வு அதிகாரி அனுபம் சிங்கிடம், இந்த கல்லை ஜென்டா பாய், அவரின் கணவரும் ஒப்படைத்து, நடந்த விவரங்களைத்தெரிவித்தனர்.
இந்தக் கல்லை ஆய்வு செய்த அனுபம் சிங், இந்த கல்ல 4.39 காரட் தரம் உடையது, சந்தை மதிப்பில் ரூ.20 லட்சம் வரை விற்கலாம் எனத் தெரிவித்தார். 

சர்வதேச புலிகள் தினம்: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 1000 புலிகள் உயிரிழப்பு

அனுபவம் சிங் நிருபர்களிடம் கூறுகையில் “ ஜென்டா பாய் வழங்கிய வைரக் கல்லை அரசே ஏலம் விடும். ஏலத்தில் வரும் தொகையில், அரசுக்கு 12 சதவீதம் வரியாக செலுத்தியது போக மற்ற தொகை ஜன்டா பாயிடமும், அவரின் கணவரிடமும் வழங்கப்படும்” என அனுபவம் சிங் தெரிவித்தார்.

இந்த வைரக் கல் கிடைத்தது குறி்த்து ஜென்டா  பாய் கூறுகையில் “ எனக்கு 2 மகள்கள், 4 மகன்கள். இந்த வைரக் கல் மூலம் கிடைக்கும் பணத்தில் எனது மகள்களுக்கு திருமணம் செய்துவைப்பேன். புது வீடு கட்டுவேன்” எனத் தெரிவித்தார்.

பசுவின் கோமியம் லிட்டர் ரூ.4க்கு வாங்கும் சத்தீஸ்கர் அரசு: முதல் விற்பனையை தொடங்கிய முதல்வர்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பண்ணா மாவட்டம் என்பது, மேம்பாடு அடைந்த பண்டேல்கன்ட் மண்டலம். இங்கு ஏராளமான வைரச் சுரங்கங்கள் உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios