சர்வதேச புலிகள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2012 முதல் 1059 புலிகள் உயிரிழந்துள்ளன. இதில் பெரும்பாலும் மத்தியப்பிரதேசத்தில் உயிரிழந்துள்ளன.

சர்வதேச புலிகள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2012 முதல் 1059 புலிகள் உயிரிழந்துள்ளன. இதில் பெரும்பாலும் மத்தியப்பிரதேசத்தில் உயிரிழந்துள்ளன.

புலிகள் அதிகம் வாழும்மாநிலம் என்று மத்தியப்பிரதேசத்தைக் குறிப்பிட்டாலும் அதிகமாக புலிகள் உயிரிழந்ததும் அந்தமாநிலத்தில்தான். 

இந்திய விமானப் படையின் மிக்-21 ரக விமானம் விபத்து... இரண்டு விமானிகள் பலி... ராஜ்நாத் சிங் இரங்கல்!!

தேசிய புலிகல் காப்பக ஆணையம்(என்டிசிஏ) வெளியிட்ட அறிக்கையில் “ 2022ம் ஆண்டில் இதுவரை 75 புலிகள் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக கடந்த 10 ஆண்டுகளில் கடந்த ஆண்டுதான் 127 புலிகள் கடந்த ஆண்டு உயிரிழந்தன. 2020ம் ஆண்டில் 106 புலிகளும், 2019ம் ஆண்டில் 96 புலிகளும், 2017ம் ஆண்டில் 117 புலிகளும், 2016ம் ஆண்டில் 121 புலிகளும், 2015ம் ஆண்டில் 82 புலிகளும், 2014ம் ஆண்டில் 78 புலிகளும், 2013ம் ஆண்டில் 68 புலிகளும் உயிரிழந்தன. 2012ம் ஆண்டில் 88 புலிகள் உயிரிழந்தன.

1. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 6 புலிகள் காப்பகங்கள் உள்ளன. கடநத 10 ஆண்டுகளில் இங்கு மட்டும் 270 புலிகள் உயிரிழந்துள்ளன.

சோனியா காந்தி மற்றும் ஸ்மிருதி இரானி இடையே பேச்சு மோதல்… அவையில் உச்சக்கட்ட பரபரப்பு!!

2. மத்தியப்பிரதேதச்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா(183), கர்நாடகா(150), உத்தரகாண்ட்(96), அசாம்(72), தமிழகம்(66), உத்தரப்பரிதேசம்(56), கேரளா(55) புலிகள் உயிரழந்துள்ளன.

3. ராஜஸ்தானில் 25 புலிகளும், பிஹாரில் 17, மே.வங்கத்தில் 13, சத்தீஸ்கரில் 11, ஆந்திராவில் 11 புலிகள் உயிரிழந்தன.

4. மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 68 புலிகள் உயிரிழந்தன. மகாராஷ்டிராவில் 48 புலிகள் உயிரிழந்தன.

5. 2018ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின்படி, மத்தியப்பிரதேசத்தில் மட்டும் 526 புலிகள் உள்ளன, அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 524 புலிகள் வாழ்கின்றன.

6. புலிகள் உயிரிழப்புக்கு பெரும்பகுதி வேட்டையாடுதலே காரணமாக இருக்கிறது. 2012 முதல் 2020ம் ஆண்டுவரை 193 புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளன. 2021ம் ஆண்டிலிருந்த வேட்டையாடப்ட்ட புலிகள் விவரம் இல்லை.

பசுவின் கோமியம் லிட்டர் ரூ.4க்கு வாங்கும் சத்தீஸ்கர் அரசு: முதல் விற்பனையை தொடங்கிய முதல்வர்

7. 108 புலிகள் இறந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர் ஆனால், 44 புலிகள் இயற்கைக்கு மாறான முறையில்உயிரிழந்துள்ளன.

8. புலிகள் உயிரிழந்தபின் அதற்கான காரணத்தை உடற்கூறு மூலம் ஆய்வு செய்தபோது, பெரும்பாலான புலிகள், இயற்கையாகவும் மரணமடைந்தன, அல்லது வேட்டையாடப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.