இந்திய விமானப்படையின் மிக்-21 ரக பயிற்சி விமானம் ராஜஸ்தான் அருகே விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரண்டு விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்திய விமானப்படையின் இரட்டை இருக்கை கொண்ட மிக்-21 ரக பயிற்சி விமானம் இன்று மாலை ராஜஸ்தானில் உள்ள உதர்லாய் விமான தளத்தில் இருந்து பயிற்சிக்காக பறந்து சென்றது. இந்த விமானம் இரவு 9:10 மணியளவில் பார்மர் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதில் பயணித்த விமானிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து விலகியது பாகிஸ்தான்... காரணம் என்னானு தெரியுமா?

Scroll to load tweet…

இதை அடுத்து உயிரிழந்த இருவ்ருக்கும் இந்திய விமான படை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் விபத்துக்கான காரணத்தை கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே உயிரிழந்த இரண்டு விமானிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆசிரியர் செய்யக்கூடிய செயலா இது? வீடியோ வைரலானதை அடுத்து ஆசிரியர் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை!!

Scroll to load tweet…

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், ராஜஸ்தானின் பார்மர் அருகே இந்திய விமான படையின் Mig-21 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்துள்ளேன். அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை என்றும் மறக்க முடியாது. இந்த சோகமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…