உத்தரபிரதேசத்தில் பள்ளி ஒன்றில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதை அடுத்து ஆசிரியர் ஒருவர் கால் நனையமால் இருக்க பள்ளி மாணவர்களை நாற்காலிகளை போட சொல்லி அதில் ஏறி நடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் பள்ளி ஒன்றில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதை அடுத்து ஆசிரியர் ஒருவர் கால் நனையமால் இருக்க பள்ளி மாணவர்களை நாற்காலிகளை போட சொல்லி அதில் ஏறி நடந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அங்கிருந்த பள்ளி ஒன்றில் மழைநீர் சூழ்ந்தது.
இதையும் படிங்க: உத்தரப்பிரதேசத்தில் பந்தாவாக சேரில் அமர்ந்திருக்கும் ஆசிரியைக்கு மசாஜ் செய்யும் மாணவன்; வைரல் வீடியோ!!
இதை அடுத்து அந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தனது கால் நனையக்கூடாது என்பதற்காக பள்ளி மாணவர்களை மழை நீரில் நாற்காலியை எடுத்துப்போடும்படி தெரிவித்துள்ளார். இதை அடுத்து பள்ளி மாணவர்கள் ஆசிரியருக்கு நாற்காலிகளை எடுத்து வரிசையாக போட்டனர். அதில் ஏறி அந்த ஆசிரியர் நடந்து சென்று பள்ளி வளாகத்திற்குள் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: அடக் கடவுளே.. ஒரே ஊசியை வைத்து 30 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி... மத்திய பிரதேசத்தில் அவலம்..
அதுமட்டுமின்றி நாறிகாலிகள் விழாமல் இருக்க மாணவர்களை தண்ணீர் நின்று பிடிக்கச் சொல்லியுள்ளார். இதனை செல்போனில் படம் பிடித்த ஒருவர், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய அம்மாநில பள்ளிக்கல்வித்துறை, அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
