indian railways: மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில்வே டிக்கெட்டில் சலுகை: ஆனால்…!
பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த கடுமையான விமர்சனங்களுக்குப்பின்,ரயில்வே துறை மீண்டும் மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் சலுகை வழங்க முடிவு செய்துள்ளதாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன
பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த கடுமையான விமர்சனங்களுக்குப்பின்,ரயில்வே துறை மீண்டும் மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டில் சலுகை வழங்க முடிவு செய்துள்ளதாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன
ஆனால், கடந்த முறை போன்று அல்லாமல் இந்த முறை சலுகை அளிப்பதில் கட்டுப்பாடு கொண்டுவர உள்ளது ரயில்வே துறை. அதாவது படுக்கைவசதி மற்றும் பொதுப்பிரிவுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.
பெங்களூரு- மும்பை இடையே ஆகாசா ஏர் விமான சேவை: ஆகஸ் 19ல் தொடக்கம்
அதிலும், 70வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் டிக்கெட்டில் சலுகை தரப்பட உள்ளது. இதற்கு முன் பெண்களுக்கு 58 வயது, ஆண்களுக்கு 60வயதாக இருந்தது. இது மாற்றப்பட உள்ளது.
ரயில்வே துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் “ இந்தக் கட்டணச் சலுகை நிச்சயம் முதியோருக்கு உதவும் என்பதை புரிந்துகொள்கிறோம். அதற்காக கட்டணச் சலுகையை முற்றிலுமாக ரத்து செய்வதாக ரயில்வே கூறவில்லை. நாங்கள் மறுஆய்வு செய்து இறுதி முடிவு எடுப்போம்” எனத் தெரிவித்தார்
hunter 350: கலக்க வரும் ராயல் என்பீல்ட், ஹோன்டாவின் இரு புதிய பைக்குகள்: விவரம் என்ன?
ரயில்வே துறை சார்பில் டிக்கெட்டில் சலுகை அளிக்க 70வயது முடிந்த முதியோருக்கு மட்டும்தான் வழங்குவது குறித்து பரிசிலீத்து வருகிறது. இதன் மூலம் ரயில்வேக்கான இழப்பையும் குறைக்க முடியும்.
கொரோனா காலத்தில் ரயில்களில் முதியோர் பயணத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கட்டணச் சலுகை திரும்பப் பெறப்பட்டது. இதன்படி 58வயது நிரம்பி பெண்களுக்கும் டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை தரப்பட்டது. ஆண்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்க டிக்கெட் கட்டணத்தில் 40 சதவீதம் தள்ளுபடி தரப்பட்டது.
மேலும் ஏ.சி.வசதி இல்லாத பெட்டிகளில் மட்டும்தான் டிக்கெட் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அதாவது குளிர்சாதன வசதி இல்லாத படுக்கைவசதி பெட்டிகள், பொதுப்பெட்டிகளில் மட்டுமே இந்த கட்டண சலுகை வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
அனைத்து ரயில்களிலும் ப்ரீமியம் தட்கல் வசதியையும் ரயில்வே துறை ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் வருவாய் அதிகரிக்கும், சலுகை அளிப்பதால் ஏற்படும் நிதிச்சுமை குறையும். ரயில்வேயில் 50 வகையான சலுகைத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதற்காக மட்டுமே ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. இதில் முதியோருக்கு மட்டும் டிக்கெட் கட்டணத்தில் 80 சதவீதம் சலுகையாகச் செல்கிறது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார மந்தநிலையின் பிடியில் ஆசிய நாடுகள்: தூண்டிலில் சிக்காத இந்தியா: இலங்கை நிலை மோசாகும்
மூத்த குடிமக்கள் கட்டண சலுகையை கைவிட வேண்டும் என ரயில்வே துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால்அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது