மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு! மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1, 2024 முதல் பொருந்தும. முந்தைய மாதங்களுக்கான நிலுவைத் தொகையையும் சேர்த்தே பெறலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்தி, மொத்தம் 50% ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்த முடிவின் மூலம் 50 லட்சம் ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு ரூ.12,868 கோடி கூடுதல் செலவாகும். மேலும, வீட்டு வாடகை படியை உயர்த்தவும் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) தரவுகளின் அடிப்படையில் தொழில்துறை வழங்கும் பரிந்துரைகள் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு தீர்மானிக்கிறது. நுகர்வோர் விலைக் குறியீட்டு தரவுகளை தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர் பணியகம் மாதந்தோறும் வெளியிடுகிறது.
மத்திய அரசின் சமையல் எரிவாயு மானியம் நீட்டிப்பு! ஒரு சிலிண்டர் ரூ.603 க்குக் கிடைக்கும்!
மத்திய அரசின் இந்த அகவிலைப்படி உயர்வு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் இருவருக்கும் பொருந்தும். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மட்டுமே இந்த ஃபார்முலா பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் அவர்களது சம்பளத்தின் ஒரு பகுதியை அகவிலைப்படியாகப் பெறுகின்றனர். இது அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கு முன் அக்டோபர் 2023 இல் வெளியான அறிவிப்பின்படி அகவிலைப்படி 4% அதிகரித்து 46% ஐ எட்டியது.
அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1, 2024 முதல் பொருந்தும் என்பதும் கவனிக்க வேண்டியதாகும். இதனால் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் முந்தைய மாதங்களுக்கான நிலுவைத் தொகையையும் சேர்த்தே பெறுவார்கள்.
ஜப்பானில் இருந்து இந்தியா வரும் 24 புல்லட் ரயில்கள்! மும்மை டூ அகமதாபாத் செல்ல 2 மணிநேரம் மட்டுமே!