ஜப்பானில் இருந்து இந்தியா வரும் 24 புல்லட் ரயில்கள்! மும்மை டூ அகமதாபாத் செல்ல 2 மணிநேரம் மட்டுமே!

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ரயில்கள் மற்றும் இயக்க முறைமை கொள்முதல் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் ஏலத்தில் எடுக்கும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Deal to procure 24 bullet trains from Japan to be concluded by month-end sgb

ஜப்பானில் இருந்து 24 ஷிங்கன்சென் E5 சீரிஸ் புல்லட் ரயில்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்த மாத இறுதிக்குள் இந்தியா முடிக்கவுள்ளது. குஜராத்தில் 2026ஆம் ஆண்டு ஜூன்-ஜூலை மாதத்தில் இந்த புல்லட் ரயில்கள் இயக்கம் தொடங்கும் என்று ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது.

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ரயில்கள் மற்றும் இயக்க முறைமை கொள்முதல் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் ஏலத்தில் எடுக்கும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அகமதாபாத் மற்றும் மும்பை இடையே 508 கிமீ தொலைவுக்கு இந்த புல்லட் ரயில் பாதை அமைய உள்ளது. இதில் இடைநில்லா சேவை மற்றும் குறைவான நிறுத்தங்கள் உள்ள சேவை என இரண்டு விதமான சேவைகளில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

லிமிடெட்-ஸ்டாப் எனப்படும் குறைவான நிறுத்தங்கள் கொண்ட ரயில்கள் மூலமே மும்பை மற்றும் அகமதாபாத் இடையே உள்ள தூரத்தை இரண்டு மணி நேரத்தில் கடக்க முடியும். மற்ற ரயில் சேவைகள் இந்தத் தூரத்தைக் கடக்க சுமார் 2 மணிநேரம் 45 நிமிடங்கள் ஆகும்.

ஜனவரி வரை இத்திட்டத்தின் பணிகள் சுமார் 40% முடிந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், குஜராத்தில் 48.3% பணிகளும் மகாராஷ்டிராவில் 22.5% பணிளும் முடிந்துள்ளன.

கடந்த ஓராண்டில், 100 கி.மீ.க்கும் அதிகமான தொலைவுக்கு வயாடக்ட் உயர்மட்ட ரயில்பாதைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஓராண்டு காலத்தில் ஆறு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்றும் குஜராத்தில் உள்ள 20 பாலங்களில் ஏழு பாலங்கள் இந்தக் காலத்தில் கட்டப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளனர்.

“சமீபத்திய மாதங்களில் மகாராஷ்டிராவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் நிலம் ஒப்படைக்கும் பணியை முடிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது” என்று ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios