உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

சமையல் எரிவாயு மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்திற்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்னும் ஓராண்டு LPG சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும். 2025ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை இந்த மானியம் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு அக்டோபரில், உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான மானிய விலை எல்பிஜி சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இப்போது அதனை ரூ.300 ரூபாயாக உயர்த்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

ஆன்லைனில் அலர்ட்டா இருக்கணும்... வெகுளித்தனமா பேசி 4.8 கோடியைப் பறிகொடுத்த தொழிலதிபர்!

Scroll to load tweet…

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு சிலிண்டர் மானியத்தை நீட்டிக்க முடிவு செய்திருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். "செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க செயற்கை நுண்ணறிவுப் பிரிவுக்கு ரூ.10,371 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" எனவும் அவர் கூறினார்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று அமைச்சர் பியூஷ் கோயில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்கள் 49.18 லட்சம் பேர், ஓய்வூதியதாரர் 67.95 பயன் அடைவார்கள் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

"கோவாவில், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு எதுவும் இல்லை. கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டுவரப்படும்" எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சணல் மானியத்தை குவிண்டாலுக்கு ரூ.285 உயர்த்துவதாகவும் இதன் மூலம் சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.5335 ஆக உயர்கிறது என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

ஜப்பானில் இருந்து இந்தியா வரும் 24 புல்லட் ரயில்கள்! மும்மை டூ அகமதாபாத் செல்ல 2 மணிநேரம் மட்டுமே!