Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைனில் அலர்ட்டா இருக்கணும்... வெகுளித்தனமா பேசி 4.8 கோடியைப் பறிகொடுத்த தொழிலதிபர்!

கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியா முழுவதும் உள்ள இரண்டு விதமான ஆன்லைன் மோசடிககளில் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி பேர்வழிகள் அபேஸ் செய்துள்ளனர்.

How an ex-MD of an MNC lost Rs 4.8 crore from his bank account in online fraud sgb
Author
First Published Mar 7, 2024, 12:20 AM IST

ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கடந்த ஒரு வருடத்தில்  இரண்டு விதமான ட்ரெண்ட்டை மோசடியில் ஈடுபடுபவர்கள் அதிகமாகப் பின்பற்றுகின்றனர். இந்தியா முழுவதும் இந்த இரண்டு விதமான ஆன்லைன் மோசடிகளால் கோடிக்கணக்கான ரூபாய்யை மக்கள்ள் இழந்துள்ளனர்.

ஒருவிதமான மோசடிக்காரர்கள், ஃபேஸ்புக்கில் உணவகத்திற்கு ரிவ்யூ எழுதுவது அல்லது யூடியூப் வீடியோக்களுக்கு லைக் செய்வது போன்ற சில எளிய பணிகளைச் செய்யும்படி கேட்பார்கள். இன்னொரு டைப் பிராடுகள் சிபிஐ அல்லது சுங்கத்துறை அதிகாரிகளைப் போல் காட்டிக்கொண்டு, அப்பாவி மக்களை பயமுறுத்தி தங்கள் வலையில் சிக்க வைக்கிறார்கள்.

இதேபோன்ற சிபிஐ தொடர்பான மோசடியில் தானேயில் உள்ள என்.என்.சி கம்பியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சிக்கியுள்ளது. அவர் மோசடி ஆசாமிகளிடம் 4.8 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளார். 67 வயதான அவர், சிபிஐ அதிகாரிகளைப் போல் தன்னிடம் பேசினர் என்றும் அதை நம்பி மோசடிக்காரர்களுக்கு இரையாகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

எம்.டி.எம்.ஏ, பாஸ்போர்ட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அடங்கிய சட்டவிரோத பொருட்களுடன் தைவானுக்கு அனுப்பப்பட்ட ஒரு பார்சலை பறிமுதல் செய்திருக்கிறோம் என்று மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர். மேலும் பார்சலில் போதைப் பொருளும் இருப்பதாகத் தெரிவித்து பணமோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப் போவதாக மிரட்டியுள்ளனர்.

ஜாம்நகரில் ஒரு ஜாலி வீக்எண்ட்! அலப்பறை கிளப்பிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

How an ex-MD of an MNC lost Rs 4.8 crore from his bank account in online fraud sgb

மும்பை காவல்நிலையத்தில் இது தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கதை அளந்துள்ளனர் அந்த ஆன்லைன் திருடர்கள். பின்னர், விசாரணைக்காக ஒரு வீடியோ கால் ஆப்பை டவுன்லோட் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் பலமுறை ஸ்கைப் மூலம் வீடியோ காலில் பேசியுள்ளனர்.

அப்போது சிபிஐ அதிகாரிகள் போல் மாறுவேடமிட்டு, வங்கி கணக்கு விவரங்கள், டெபிட் கார்டு எண்கள் மற்றும் சிவிவி குறியீடுகள் போன்ற முக்கியமான தகவல்களைக் கூறும்படி வற்புறுத்தியுள்ளனர். சொத்து விவரங்களையும் தெரிவிக்கும்படி உருட்டி மிரட்டி டார்ச்சர் செய்துள்ளனர்.

பின்னர் சட்டவிரோத பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டி, ரூ.4.8 கோடி வரை அபேஸ் செய்துள்ளனர். பிறகு மேலும் ரூ.1 கோடியை அனுப்புமாறு படுத்தியுள்ளனர். நல்ல வேளையாக அப்போது சுதாரித்துக்கொண்ட அவர் இங்கிலாந்தில் உள்ள தனது மகனைக் கலந்தாலோசித்துள்ளார். அப்போதுதான் தான் ஏமாற்றப்படுவது பற்றித் தெரிந்துள்ளது.

உடனே இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தார். இந்த வழக்கை மும்பை தானே போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் ஆன்லைன் மோசடிகளின் தீவிரத் தன்மையையும் விழிப்புடன் இருப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. தொலைபேசியில் பேசும் யாரிடமும் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம். அதிகாரபூர்வ ஏஜென்சியில் இருந்து பேசுவதாகக் கூறும் எந்தவொரு அழைப்பையும் உடனே நம்பிவிடாமல், தீர விசாரிப்பது நல்லது.

5G மொபைல் விலையைக் குறைத்த ஒன்பிளஸ்! OnePlus 11R இப்ப என்ன விலை தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios