சுவிட்சர்லாந்தில், உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றை வாங்கிய இந்திய குடும்பம்.. தலைசுற்ற வைக்கும் விலை!
சுவிட்சர்லாந்தில் உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றை இந்திய குடும்பம் வாங்கி உள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரான பங்கஜ் ஓஸ்வால் மற்றும் அவரது மனைவி ராதிகா ஓஸ்வால் ஆகியோர் சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் உலகின் மிக விலையுயர்ந்த பங்களாக்களில் ஒன்றை வாங்கியுள்ளனர். 430,000 சதுர அடி கொண்ட இந்த ஆடம்பர பங்களாவை வாங்க 200 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 1,639 கோடி) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்டினா ஓனாசிஸ் என்ற கிரேக்க கப்பல் மன்னன் அரிஸ்டாட்டில் ஓனாசிஸின் மகள் இந்த ஆடம்பர வீட்டை ஒரு காலத்தில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. உலகின் முதல் பத்து விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாக அறியப்படும் ஆடம்பரமான பங்களாவை வாங்க பங்கஜ் மற்றும் அவரின் மனைவி 200 மில்லியன் டாலர் செலுத்தியதாக கூறப்படுகிறது.
380 ஆயிரம் கோடி நன்கொடை அளித்த உலகின் பெரும்பணக்காரர்! யார் இந்த வாரன் பஃபெட்?
பங்கஜ் ஓஸ்வால் குடும்பம் இந்த விலை உயர்ந்த வீட்டை வாங்கிய போது அந்த வீடு மறு வடிவமைக்கப்பட்டது. மேலும், புகழ்பெற்ற உள்துறை வடிவமைப்பாளர் ஜெஃப்ரி வில்க்ஸ் மூலம் அந்த வீடு புதுப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது. பங்கஜ் ஓஸ்வால் குடும்பம் 2013-ல் ஆஸ்திரேலியாவில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு இடம் பெயர்ந்தது. பங்கஜ் மற்றும் ராதிகா ஓஸ்வாலுக்கு வசுந்தரா ஓஸ்வால் (24), ரிதி ஓஸ்வால் (19) என்ற 2 மகள்கள் உள்ளனர். வசுந்தரா ஓஸ்வால், PRO இண்டஸ்ட்ரீஸ் PTE LTD இன் நிர்வாக இயக்குநராகவும், Axis Minerals மற்றும் Axis Minerals நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரலாகவும் உள்ளார். ரிதி ஓஸ்வால், லண்டனில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
ரிடி ஓஸ்வால் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், “இந்தியராகவும் வெளிநாட்டில் வசிப்பவராகவும் இருப்பதால், உங்கள் கலாச்சாரம், குறிப்பாக அழகியல், உணவு மற்றும் மக்களைப் பற்றிய சிறிய விஷயங்களை நீங்கள் எப்போதும் தவறவிடுகிறீர்கள். இந்தியாவிலிருந்து விலகி ஒரு சிறிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது எனது குடும்பத்தின் கனவாக இருந்தது, அதில் அவர்கள் வெற்றி பெற்றதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள பிரபலமான விஷயங்களால் இந்த சொத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஜெய்ப்பூரின் அம்பர் அரண்மனையால் ஈர்க்கப்பட்ட அழகிய செதுக்கப்பட்ட பகுதிகள், மாளிகை முழுவதும் சுவரில் காணப்படுகிறது, அதே நேரத்தில் துருக்கி மற்றும் மொராக்கோவில் இருந்து பல சரவிளக்குகள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு தனியார் உடற்பயிற்சி கூடம், தங்கம் பதிக்கப்பட்ட ஸ்பா மற்றும் ஆரோக்கிய பிரிவு ஆகியவை உள்ளன. மேலும் அங்குள்ள பிரம்மாண்ட பிரஞ்சு ஜன்னல்கள். பனி மூடிய மலைகளின் அழகான காட்சிகளை வழங்குகின்றன.
இந்தியாவின் விலையுயர்ந்த கார் இவரிடம் தான் உள்ளது.. ஆனால் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி இல்லை..