இந்தியாவின் விலையுயர்ந்த கார் இவரிடம் தான் உள்ளது.. ஆனால் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி இல்லை..

விலையுயர்ந்த சொகுசு கார்களை தயாரிப்பதில் பென்ட்லி நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது.

He owns India's most expensive car.. But neither Mukesh Ambani nor Gautam Adhani..

பிரிட்டிஷ் கார் உற்பத்தி நிறுவனமான, பென்ட்லி (Bentley) தனது ஆடம்பர கார்களுக்கு பெயர் பெற்ற நிறுவனமாக உள்ளது. விலையுயர்ந்த சொகுசு கார்களை தயாரிப்பதில் இந்த நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. தற்போது, இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த சொகுசு கார் Bentley Mulsanne EWB Centenary Edition ஆகும். இந்த கார் சமீபத்தில் பெங்களூரில் காணப்பட்டது. இந்த காரின் விலை ரூ.14 கோடி ஆகும். ஆனால் இந்திய பெரும்பணக்காரர்களான முகேஷ் அம்பானியோ, கௌதம் அதானியோ அல்லது ஆதர் பூன்னவல்லாவிடமோ இந்த கார் இல்லை. ஆம்.. இந்த ஸ்பெஷல் லிமிடெட் எடிஷன் மாடல் British Biologicals நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் விஎஸ் ரெட்டிக்கு சொந்தமானது.

ஜம்மு காஷ்மீர் என்கவுண்ட்டர்.. பயங்கரவாதி சுட்டுக்கொலை.. நள்ளிரவில் பரபரப்பு..

British Biologicals. நிறுவனத்தின் நிறுவனர் வி.எஸ். ரெட்டி, சொகுசு கார் பிரியர் ஆவார். நாட்டில் உள்ள அனைத்து பிராண்டுகளையும் சேகரிக்க வேண்டும் என்பது தனது சிறுவயது கனவு என்று அவர் முறையில் பேட்டியில் கூறியிருந்தார்.  அவர் பென்ட்லி காரை, கார்களின் தாஜ்மஹால் என்று அழைக்கிறார். கர்நாடகாவைச் சேர்ந்த வி எஸ் ரெட்டி 52 தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றவர். பல்வேறு வயதினருக்கு மலிவு விலையில் தடுப்பு ஊட்டச்சத்தை வழங்கும் நோக்கத்துடன் பிரிட்டிஷ் உயிரியல் நிறுவனத்தைத் தொடங்கினார்.

British Biologicals என்பது, ஒரு ஆராய்ச்சி அடிப்படையிலான ஹெல்த்கேர் நியூட்ராசூட்டிகல் நிறுவனமாகும், இது ‘Protein people’ என்று பிரபலமாக அறியப்படுகிறது. British Biologicals  நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தயாரிப்புகள், குழந்தைகள், நீரிழிவு, மகளிர் மருத்துவம், இருதயம், ஹெபடைடிஸ் மற்றும் முதியோர் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றுக்கான ஊட்டச்சத்து தீர்வுகளை வழங்கி வருகிறது.

 

காலம் தவறி பெய்யும் மழை.. பருவமழை சீரற்றதாக மாற என்ன காரணம்? நிபுணர்கள் விளக்கம்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios