MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.10 லட்சம் காப்பீடு கிடைக்கும்!.. ஏடிஎம் கார்டு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்!..

ரூ.10 லட்சம் காப்பீடு கிடைக்கும்!.. ஏடிஎம் கார்டு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்!..

பல வங்கிகள் தங்கள் டெபிட் கார்டுகளுடன் இலவச விபத்து காப்பீட்டை வழங்குகின்றன, ஆனால் இது பலருக்குத் தெரிவதில்லை. உங்கள் கார்டின் வகை மற்றும் வங்கியின் விதிமுறைகளைப் பொறுத்து காப்பீட்டுத் தொகை மாறுபடும்.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 22 2026, 02:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டெபிட் கார்டு
Image Credit : our own

டெபிட் கார்டு

நம் நாட்டில் பலர் டெபிட் கார்டை ஏடிஎம்மில் பணம் எடுக்க அல்லது ஷாப்பிங் செய்ய மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் பெரும்பாலான வங்கிகள் டெபிட் கார்டுடன் இலவச விபத்து காப்பீடு வழங்குகின்றன என்பதை பலருக்கும் தெரியாது. இந்த பாதுகாப்பு தானாக செயல்படாது; சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால்தான் காப்பீடு அமலாகும்.

25
தனிநபர் விபத்து காப்பீடு
Image Credit : our own

தனிநபர் விபத்து காப்பீடு

எஸ்பிஐ, கோடக் மஹிந்திரா, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி போன்ற முன்னணி வங்கிகள் தனிநபர் விபத்து காப்பீடு (Personal Accident Cover) வழங்குகின்றன. இது பெரும்பாலும் குழு காப்பீடு (குரூப் பாலிசி) வடிவத்தில் இருக்கும். அதனால் ஒவ்வொரு கார்ட்டருக்கும் தனி பாலிசி எண் இருக்காது. இதில் விபத்து மரணம், நிரந்தர ஊனமுற்றல், விமான விபத்து பாதுகாப்பு, மோசடி பாதுகாப்பு போன்ற பலன்கள் இருக்கலாம்.

Related Articles

Related image1
4 லட்சம் பேர் வாங்கி இருக்காங்க.. அடிமட்ட ரேட்டில் கிடைக்கும் தரமான மைலேஜ் பைக்
Related image2
ஏப்ரல் 1 முதல் டோல் விதிமுறையில் மாற்றம்.. டபுள் கட்டணம்.. பயணிகள் கவனத்திற்கு
35
முக்கியமான நிபந்தனை
Image Credit : our own

முக்கியமான நிபந்தனை

ஆனால் இந்த காப்பீட்டை பெற முக்கியமான நிபந்தனை, டெபிட் கார்டை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். சில வங்கிகள் கடந்த 60 அல்லது 90 நாட்களில் குறைந்தபட்ச POS அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்திருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கின்றன. இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாவிட்டால் காப்பீடு அமலாகாது.

45
இலவச இன்சூரன்ஸ்
Image Credit : our own

இலவச இன்சூரன்ஸ்

அதனால் மின்சாரம், மொபைல் ரீசார்ஜ், பெட்ரோல் போன்ற சிறிய மாதாந்திர செலவுகளை டெபிட் கார்டு மூலம் செலுத்துவது நல்லது. கார்டின் வகையைப் பொறுத்து காப்பீட்டு தொகை மாறும். சாதாரண கார்டுக்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை; பிரீமியம் கார்டுகளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கிடைக்கும்.

55
வங்கியில் சரிபார்ப்பது அவசியம்
Image Credit : Asianet News

வங்கியில் சரிபார்ப்பது அவசியம்

கிளைம் செய்யும் போது, ​​நாமினி குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கியை தொடர்புகொண்டு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். எனவே உங்கள் டெபிட் கார்டுக்கு காப்பீடு உள்ளதா? நிபந்தனைகள் என்ன? முன்கூட்டியே வங்கியில் சரிபார்ப்பது மிக முக்கியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
காப்பீடு
வங்கி
தானியங்கிப் பணப் பட்டுவாடா இயந்திரம்
வங்கி விதிகள்
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏப்ரல் 1 முதல் டோல் விதிமுறையில் மாற்றம்.. டபுள் கட்டணம்.. பயணிகள் கவனத்திற்கு
Recommended image2
ஹோலிக்கு முன் 60% சம்பள உயர்வா.? அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் ஜாக்பாட்.. டிஏ வேற இருக்கு
Recommended image3
இனி "No Balance" பயம் வேண்டாம்! ₹10,000 வரை ஓவர்டிராப்ட் வசதி பெறுவது எப்படி?
Related Stories
Recommended image1
4 லட்சம் பேர் வாங்கி இருக்காங்க.. அடிமட்ட ரேட்டில் கிடைக்கும் தரமான மைலேஜ் பைக்
Recommended image2
ஏப்ரல் 1 முதல் டோல் விதிமுறையில் மாற்றம்.. டபுள் கட்டணம்.. பயணிகள் கவனத்திற்கு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved