டொயோட்டா காம்ரி ஸ்பிரிண்ட் எடிஷன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஹைப்ரிட் என்ஜின், டூயல்-டோன் எக்ஸ்டீரியர் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த ஸ்போர்ட்டி செடான் கவர்கிறது.

இந்தியாவில் டொயோட்டா காம்ரி ஸ்பிரிண்ட் எடிஷன் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ.48.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காம்ரியின் இந்த புதிய பதிப்பு, எலெகன்ஸ் ட்ரிம் மாடலின் விலைக்கே கிடைக்கிறது. ஆனால், ஸ்பிரிண்ட் எடிஷனில் சில சிறப்பான காஸ்மெட்டிக் மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது ஸ்போர்ட்டி தோற்றத்துடன் வருகிறது.

சக்திவாய்ந்த ஹைப்ரிட் என்ஜின்

டொயோட்டா காம்ரி ஸ்பிரிண்ட் எடிஷன் 2.5 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜினுடன் வருகிறது. அதனுடன் eCVT கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கேம்பினேஷன் 230 ஹெச்பி பவரையும் 220 என்.எம் டார்க்கையும் வழங்குகிறது. எனவே, சக்தி மற்றும் சவாரி அனுபவத்தில் பயணிகளுக்கு ஒரு பிரீமியம் லக்ஷுரி செடான் உணர்வு கிடைக்கும்.

டூயல்-டோன் எக்ஸ்டீரியர் லுக்

வெளியுறையில், ஸ்பிரிண்ட் எடிஷன் மிகப்பெரிய மாற்றம் டூயல்-டோன் கலர் கம்பிநேஷனாகும். பின்புற டிராங்க், போனெட், ரூஃப் ஆகியவற்றில் மேட் பிளாக் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மேட் பிளாக் அலாய் வீல்ஸ் மற்றும் ரியர் ஸ்பாய்லர் இணைக்கப்பட்டுள்ளதால் கார் ஒரு ஸ்போர்ட்டி செடான் லுக்கை வழங்கப்படுகிறது.

நிற வகைகள்

இந்த எடிஷன் மொத்தம் ஐந்து தனித்துவமான டூயல்-டோன் நிறங்களில் கிடைக்கிறது. அவை: Emotional Red & Matte Black, Platinum White Pearl & Matte Black, Cement Gray & Matte Black, Precious Metal & Matte Black மற்றும் Dark Blue Metallic & Matte Black ஆகும். வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யலாம்.

முக்கிய அம்சங்கள்

12.3 அங்குல டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழுக்க டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ, மூன்று-பிரிவு ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஹெட்-அப் டிஸ்ப்ளே, எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் 10-வே பவர் அட்ஜஸ்டபிள் முன்புற சீடுகள் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு தரப்பில், டொயோட்டாவின் Safety Sense 3.0 (லெவல் 2 ADAS) சிஸ்டம் இதில் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒன்பது ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா மற்றும் பல சிக்கலான பாதுகாப்பு அம்சங்களுடன், காம்ரி ஸ்பிரிண்ட் எடிஷன் தனது பிரீமியம் காம்பினேஷனை மேலும் வலுப்படுத்துகிறது.