குறைந்த விலையில் ஸ்போர்ட்ஸ் பைக் வந்தாச்சு.. கேடிஎம் பைக் விலை இவ்வளவு தானா
இந்திய சந்தையில் KTM நிறுவனம் புதிய 160 Duke பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. சக்திவாய்ந்த 160cc எஞ்சின், ஸ்போர்ட்டி லுக் மற்றும் நவீன அம்சங்களுடன் இது இளைஞர்களை ஈர்க்கும்.

கேடிஎம் மலிவு பைக்
இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களுக்காக புதிய மற்றும் மலிவான மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது கேடிஎம் (KTM). KTM-இன் லைன்அப்பில் 200 Duke-க்கும் கீழே இடம் பெறும். பஜாஜ் பல்சர் NS160, யமஹா MT-15 V2.0 மற்றும் TVS அபாச்சி RTR 200 4V போன்ற பிரபல மாடல்களுக்கு இது கடுமையான போட்டியாக இருக்கும்.
கேடிஎம் 160 டியூக் விலை
கேடிஎம் 160 டியூக் (KTM 160 Duke) பைக்குக்கு ரூ.1.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அம்சமாக, 10 ஆண்டுகள் உத்தரவாதமும், பல்வேறு நிதி திட்டங்களும் வழங்கப்படுகின்றன. ஆகஸ்ட் 12 முதல் டீலர்களிடம் கிடைக்கத் தொடங்கும். KTM-In Duke சீரிஸ் ஏற்கனவே சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் 160 Duke சேர்வதால் விற்பனை மேலும் உயரும் என நிறுவனம் நம்புகிறது.
கேடிஎம் 160 டியூக் அம்சங்கள்
இதனுடன், விரைவில் அறிமுகமாகவுள்ள RC 160 KTM-இன் மலிவு விலை RC மாடலாக இருக்கும். 160 Duke, KTM-இன் தனித்துவமான டிசைன் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. 160cc நெக்கெட் பைக் என்றாலும், அதில் உயர் செயல்திறன் மற்றும் பிரீமியம் ஸ்போர்ட்டி லுக் இரண்டும் இணைந்துள்ளன. சிக்னேச்சர் LED ஹெட்லாம்ப், டேங்க் கவர், அகலமான எரிபொருள் டேங்க், ஸ்லீக் டெயில், LED டெயில் லைட் ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஆரஞ்சு-பிளாக் மற்றும் நீலம்-வெள்ளை (ஆரஞ்சு ஹைலைட்ஸ்) நிறங்களில் கிடைக்கும்.
இந்தியாவின் சக்திவாய்ந்த 160cc பைக்
5.0 அங்குல LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நெவிகேஷன், கால் ரிசீவ் மற்றும் மியூசிக் பிளே வசதிகள் உள்ளன. இந்தியாவின் சக்திவாய்ந்த 160cc பைக் என KTM 160 Duke-ஐ விளம்பரப்படுத்துகிறது. 200 டியூக் பிளாட்ஃபார்மில் இருந்து பெறப்பட்ட 160cc லிக்விட் கூல்ட் எஞ்சின், 18.74 bhp பவர் மற்றும் 15.5 Nm டார்க் வழங்கும். இதே எஞ்சின் மற்றும் சாசி வரவிருக்கும் RC 160-லும் பயன்படுத்தப்படும்.
கேடிஎம் 160 டியூக் டிசைன்
முன்புறத்தில் USD ஃபோர்க், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டது. முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக், பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மலிவு விலை மற்றும் உயர் அம்சங்களுடன் 160 டியூக், ஸ்போர்ட்ஸ் பைக் சந்தையில் புதிய வரலாற்றை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.