மலிவு விலையில் வெளியான பிரீமியம் பைக்.. ரூ.75 ஆயிரம் கூட கிடையாது பாஸ்
ஹீரோ HF டீலக்ஸ் ப்ரோ பைக்கில் புதிய அம்சங்கள் மற்றும் ஸ்டைலிஷ் டிசைன் இணைந்துள்ளது. குறைந்த விலை, நல்ல மைலேஜ் மற்றும் நவீன வசதிகள் உடன் வருகிறது.

ஹீரோ கம்யூட்டர் பைக்
பொதுவாக கம்யூட்டர் பைக்குகள் எளிமையானவை ஆகும். இந்த பைக்குகள் அடிப்படை வசதிகளுடன் மட்டுமே இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், ஹீரோ HF டீலக்ஸ் புரோ உங்களை ஆச்சரியப்படுத்தும். இது HF டீலக்ஸ் பைக்கின் டாப் மாடல் ஆகும். இந்த பைக் ஆனது பழைய நம்பிக்கையான வடிவமைப்புடன், புதிய அம்சங்களும் ஸ்டைலிஷ் டிசைனும் இணைந்துள்ளது. குறைந்த விலை, நல்ல மைலேஜ் மற்றும் நவீன அம்சங்கள் உடன் வருகிறது.
எஞ்சின் செயல்திறன்
இந்த பைக்கில் 97.2cc சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்சின் உள்ளது. இது 7.9PS பவர், 8.05Nm டார்க் அளிக்கிறது. நகர சாலைகளில் வசதியாக ஓட்ட 4-ஸ்பீட் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஹீரோ ஸ்ப்ளெண்டர், பாஷன் பிளஸ் போன்ற பிரபல மாடல்களிலும் இதே எஞ்சின் பயன்படுத்தப்படுவதால், நம்பகத்தன்மை உறுதி என்று கூறலாம்.
HF டீலக்ஸ் ப்ரோ டிசைன்
HF டீலக்ஸ் ப்ரோ, பாரம்பரிய கம்யூட்டர் வடிவத்தையே போல தோன்றினாலும், அருகே பார்த்தால் புதிய கிராபிக்ஸ், சுத்தமான பாடி லைன்கள், காம்பாக்ட் டிசைன் போன்ற பல மேம்பாடுகள் தெரியும். அன்றாட பயன்பாட்டுக்கு எளிமையானதாய் இருந்தாலும், ஸ்டைலிஷ் லுக் உடன் அசத்துகிறது.
ஹீரோ HF டீலக்ஸ் ப்ரோ விவரங்கள்
இந்த பைக்கில் எல்.சி.டி கன்சோல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்பீட், எரிபொருள் அளவு, நேரம், ட்ரிப், ஓட்டோமீட்டர் ரீடிங்ஸ் போன்றவை தெரியும். இந்த விலை பிரிவில் அரிதான எல்.ஐ.டி ஹெட்லெம்ப் உள்ளது. மேலும், ஹீரோவின் i3s ஐடில் ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டம் இருப்பதால், டிராஃபிக் சிக்னலில் எரிபொருள் சேமிக்க முடியும்.
ஹீரோ HF டீலக்ஸ் ப்ரோ அம்சங்கள்
டியூபுலர் டபுள் கிரேடில் ஃபிரேமுடன், முன்புறம் டெலஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் 2-ஸ்டெப் அட்ஜஸ்டபிள் ட்வின் ஷாக் அப்சார்பர் உள்ளது. 18 இன்ச் அலாய் வீல்கள், இருபுறமும் 130மிமீ டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளன. வெறும் 112 கிலோ எடை, 805மிமீ சீட் உயரம் என்பதால், ஓட்டும் அனுபவம் மிகவும் எளிதானது.