ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) அக்டோபர் 2025-ல் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராகத் தொடர்ந்தாலும், மொத்த விற்பனையில் சரிவைச் சந்தித்தது.
ஹீரோ மோட்டோகார்ப் அக்டோபர் 2025-லும் உலகின் மிகப்பெரிய இரண்டு சக்கர வாகனம் உற்பத்தியாளராகச் சாதனை தொடர்ந்துள்ளது. ஆனால் விற்பனை எண்ணிக்கையில் கலவையான நிலை காணப்பட்டது. மொத்த விற்பனையில் தளர்வு இருந்தாலும், சில மாடல்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளது.
ஸ்ப்ளெண்டர் இன்று இந்தியாவின் கிங்
ஹீரோ அக்டோபரில் 6,03,615 யூனிட்கள் விற்றுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 7.71% குறைவு (கடந்த ஆண்டு 6,54,063). GST 2.0 விலை குறைப்பு, பண்டிகை சீசனும் இருந்தும் விற்பனை குறைந்தது. அதுபோல் Hero Splendor இந்தியாவின் எண்.1 பைக் என்ற பட்டத்தை தொடர்ந்தாலும், விற்பனை 13.15% குறைந்து 3,40,131 யூனிட்களாக இருந்தது. இருந்தாலும் 56% சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது.
HF டீலக்ஸ், கிளாமர் செயல்திறன்
Hero HF Deluxe 1,13,998 யூனிட்கள் விற்றது. 8.32% குறைவு பெற்றுள்ளது. ஆனால் ஹீரோ கிளாமர் 28,823 யூனிட்கள் விற்று 18.34% வளர்ச்சி கண்டுள்ளது. ஸ்போர்ட்டி லுக் மற்றும் சிறந்த மைலேஜ் காரணமாக இந்த கேள்வி அதிகரித்து வருகிறது.
ஸ்கூட்டர் பிரிவில் ஹீரோவின் மறுபிரவேசம்
ஸ்கூட்டர் பிரிவில் ஹீரோ மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. Destini 125 – 26,754 யூனிட்கள், 83.93% வளர்ச்சி அடைந்துள்ளது. விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் – 14,019 யூனிட்கள், 60.22% வளர்ச்சி அடைந்துள்ளது. விடா பிராண்ட் மின்சார வாகன சந்தையில் வேகமாக நிலைபெற்று வருகிறது. விரைவில் ஹீரோ தனது முதல் எலக்ட்ரிக் பைக் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
ஸ்போர்ட்ஸ் பிரிவு
Hero Xpulse விற்பனை இரட்டிப்பாகி 4,161 யூனிட்கள் எட்டியுள்ளது. சாகச பைக் சந்தையில் இதன் Craze தொடர்கிறது. ஆனால் Extreme 125R விற்பனை 38.14% குறைந்து, 24,582 யூனிட்கள் மட்டுமே.
- எக்ஸ்ட்ரீம் 160/200 – 2,670 யூனிட்கள்
- எக்ஸ்ட்ரீம் 250R – 833 யூனிட்கள்
- ஜூம் 160 – 453 யூனிட்கள்
விற்பனை 685% உயர்வு
தொடக்க காலத்தில் குறைந்த விற்பனையில் இருந்து Hero Karizma 210, இப்போது மீண்டும் ரசிகர்களிடம் Craze உருவாகியுள்ளது. விற்பனை 685.71% வளர்ச்சி பெற்று 55 யூனிட்கள் விற்றுள்ளது (கடந்த ஆண்டு 7 யூனிட்கள்). புதிய வடிவமைப்பு மற்றும் அப்டேட்கள் இந்த மாடலை மீண்டும் சந்தையில் பிரபலமாக்கியுள்ளன.


