டெஸ்லாவை காப்பி அடிக்கும் இந்திய நிறுவனம்... நிரந்தரத் தடை கோரி வழக்கு தொடர்ந்து எலான் மஸ்க்!

டெஸ்லா பவர் நிறுவனம் பேட்டரிகளை மட்டுமே உற்பத்தி செய்து வருகிறது என்றும் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் திட்டம் இல்லை என்றும் டெஸ்லா பவர் நிறுவனம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Elon Musk's Tesla files trademark infringement case against Gurugram-based Tesla Power sgb

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த டெஸ்லா பவர் நிறுவனத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்கிறது. உலகப் புகழ்பெற்ற டெஸ்லாவின் கார்களை இந்தியாவிலும் உற்பத்தி செய்ய எலான் மஸ்க்கின் நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த டெஸ்லா பவர் என்ற பேட்டரி தயாரிப்பு நிறுவனப் ஒன்றுக்கு எதிராக டெஸ்லா நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த நிறுவனம் லெட் ஆசிட் பேட்டரிகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சர்வதேச தலைமையகம் அமெரிக்காவில் டெலாவரில் உள்ளது.

டெஸ்லா பவர் நிறுவனம் டெஸ்லா நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி தனது பொருட்களை விளம்பரம் செய்ய முயற்சி செய்கிறது என டெஸ்லா நிறுவனத்தின் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, டெஸ்லா பவர் நிறுவனத்துக்கு டெஸ்லா என்ற பெயரை பயன்படுத்த நிரந்தர தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

ஒரே படத்துல நடிச்ச ஹீரோவிடம் இத்தனை காரா! கார் கலெக்‌ஷன் லிஸ்ட் போட்டு காட்டிய மாதம்பட்டி ரங்கராஜ்!

Elon Musk's Tesla files trademark infringement case against Gurugram-based Tesla Power sgb

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதரே இது தொடர்பாக டெஸ்லா பவர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் அதற்குப் பிறகும் தொடர்ந்து டெஸ்லா பெயரை அந்த நிறுவனம் பயன்படுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ஆதாயம் தேட முயன்றதற்காக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் டெஸ்லா நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் கோரியுள்ளது.

டெஸ்லா பவர் நிறுவனம் பேட்டரிகளை மட்டுமே உற்பத்தி செய்து வருகிறது என்றும் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் திட்டம் இல்லை என்றும் டெஸ்லா பவர் நிறுவனம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எல்லா விதமான அரசு அனுமதிகளும் பெற்றே இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் டெஸ்லா பவர் நிறுவனம் ஆவணங்களுடன் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய 3 வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மே 22ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

ஆன்லைன் மோசடியில் இதுதான் புது ட்ரெண்ட்! உஷாரா இல்லாட்டி பேங்க் அக்கவுண்ட் காலி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios