- Home
- Auto
- ஒரே படத்துல நடிச்ச ஹீரோவிடம் இத்தனை காரா! கார் கலெக்ஷன் லிஸ்ட் போட்டு காட்டிய மாதம்பட்டி ரங்கராஜ்!
ஒரே படத்துல நடிச்ச ஹீரோவிடம் இத்தனை காரா! கார் கலெக்ஷன் லிஸ்ட் போட்டு காட்டிய மாதம்பட்டி ரங்கராஜ்!
நடிகாரகவும் சமையல் ஜாம்பவானாகவும் புகழ்பெற்றிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னிடம் இருக்கும் கார்கள் பற்றி பேசியுள்ளார். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது கார் கலெக்ஷன் குறித்து வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

Madhampatty Rangaraj
மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் என்ற பெயநரில் கேட்டரிங் நிறுவனம் ஒன்றையும் நடத்திக்கொண்டிருக்கிறார். பிரதமர், முதலமைச்சர் போன்ற பெரிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம் கேட்டரிங் சேவையை வழங்கியுள்ளது. சமையல், நடிப்பு தவிர கார் கலெக்ஷனிலும் ஆர்வம் கொண்ட ரங்கராஜ் என்னென்ன கார்கள் வைத்திருக்கிறார் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
Tata Indica
டாடா இண்டிகா: இந்த கார் 1998 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தக் காலத்தில் முதல் கார் வாங்கும் பலரும் இதைத்தான் வாங்கியிருப்பார்கள். மாதம்பட்டி ரங்கராஜன் வாங்கிய முதல் காரும் இந்த டாடா இண்டிகா தான்.
Ford Endeavour
ஃபோர்டு எண்டேவர்: ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் விற்பனையை நிறுத்திவிட்டது. இருந்தாலும் ஃபோர்டு காருக்கு ரசிகர்கள் இன்னும் இருக்கிறார்கள். மாதம்பட்டி ரங்கராஜ் இந்தக் காரை வாங்கி இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறார்.
Jaguar XF
ஜாகுவார் எக்ஸ்எப்: மாதம்பட்டி ரங்கராஜ் வாங்கிய முதல் சொகுசு கார் இதுதான். இப்போது சுமார் 75 லட்சத்துக்கு விற்கப்படும் இந்த காரை மாதம்பட்டி ரங்கராஜ் முன்பே வாங்கியிருக்கிறார். ஆனால், இப்போது இந்தக் கார் அவரிடம் இல்லையாம்.
BMW X3
பிஎம்டபிள்யூ எக்ஸ்3: மாதம்பட்டி ரங்கராஜ் அடிக்கடி பயன்படுத்தும் கார் கார் இது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சிறந்த எஸ்யூவி கார்களில் ஒன்று எக்ஸ் 3. இதன் விலை இப்போது ரூ.72.50 லட்சம்.
Volvo V40
வால்வோ வி40: ஹேட்ச்பேக் ரகத்தைச் சேர்ந்த வால்வோ வி40 கார் இப்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்காது. 2019ஆம் ஆண்டில் இதன் விற்படை நிறுத்தப்படுவதற்கு முன்பே இந்தக் காரை மாதம்பட்டி ரங்கராஜ் வாங்கிப் போட்டிருக்கிறார்.
Mercedes Benz GLA
மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மூன்று வேரியன்ட்களில் இந்தக் காரை விற்பனை செய்கிறது. இதன் அதிகபட்ச விலை ரூ.58.15 லட்சம். இந்த காரும் மாதம்பட்டி ரங்கராஜ் கார் லிஸ்டில் வருகிறது.
Jaguar XJL
ஜாகுவார் எக்ஸ்ஜே எல்: மாதம்பட்டி ரங்கராஜ் வைத்திருக்கும் காஸ்ட்லி கார் இதுதான். அவர் ஏற்கெனவே பயன்படுத்தி வந்த ஜாகுவார் எக்ஸ்எப் காரைக் கொடுத்துவிட்டு ஜாகுவார் எக்ஸ்ஜே எல் 4 சீட்டர் செடான் காரை வாங்கியுள்ளார். இது 1.97 கோடி ரூபாய் விலையில் விற்கப்படுகிறது.
Porsche Macan
போர்ஷ் மேக்கன்: போர்ஷ் நிறுவனத்தின் மேக்கன் 5 சீட்டர் எஸ்யூவி கார். இதன் தற்போதைய விலை ரூ.1.53 கோடி. இந்தக் காரையும் மாதம்பட்டி ரங்கராஜ் பயன்படுத்தி வருகிறார்.
Range Rover
ஆட்டோபயோகிராபி ரேஞ்ச்ரோவர்: ரூ.3.43 கோடி விலையில் விற்பனையாகும் இந்த கார் தான் மாதம்பட்டி ரங்கராஜின் அடுத்த டார்கெட். விரைவில் இந்தக் காரும் அவரது கலெக்ஷனில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.