கடைசி நேரத்தில் சுதாரித்துக் கொண்டதால் அதிதி தனது பணத்தை இழக்காமல் தப்பியுள்ளார். இந்த மோசடி முயற்சியில் தனது அனுபவத்தை அனைவரிடமும் சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் சஜகமாகிவிட்ட நிலையில் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. மோசடி செய்பவர்கள் புதுப்புது வழிகளில் பணத்தைப் பறித்து வருகின்றனர். மின்னஞ்சல், போலி இணையதளம், கிரெடிட் கார்டு மற்றும் பாஸ்வேடு எற பல தந்திரங்களைப் பயன்படுத்தி ஏமாற்றுகின்றனர்.

இப்போது, ஒரு புதிய மோசடி போக்கு அதிகரித்து வருகிறது. அதிதி சோப்ரா என்ற பெங்களூரு பெண் அதைப்பற்றி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், எஸ்எம்எஸ் மூலம் நிதி மோசடி செய்ய முடியன்றவரிடம் இருந்து எப்படித் தவிப்பித்தேன் என்பதை அவர் விவரித்துள்ளார். தனது தந்தைக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறி ஒரு முதியவர் போல ஒருவர் பேசியதாக அதிதி தெரிவித்துள்ளார்.

அலுவலகப் பணியில் இருந்தபோது, நடுவில் அதிதிக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் முதியவரின் குரலில் ஒருவர் பேசினார். "டியர், நான் உன அப்பாவுக்குப் பணம் அனுப்ப வேண்டியிருக்கிறது. ஆனால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே அதை உனக்கு அனுப்புகிறேன். தயவுசெய்து சரிபார்க்கவும், இது உன்னுடைய நம்பர்தானே?" என்று கேட்டுள்ளார்.

விண்வெளி மர்மம்! 140 மில்லியன் மைல் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த லேசர் செய்தி!

Scroll to load tweet…

சிறிது நேரத்தில் அதிதி சோப்ராவின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாக இரண்டு மெசேஜ்கள் வந்தன. முதலில் ரூ.10,000 கிரெடிட் செய்யப்பட்டதாக எஸ்.எம்.எஸ் வந்தது. பின்னர் ரூ.30,000 கிரெடிட் செய்யப்பட்டதாக வந்தது.

பின்னர் போனில் மீண்டும் அழைத்த அந்த நபர் ஒரு தவறு நடந்ததாகக் கூறினார். ரூ.3,000க்குப் பதிலாக ரூ.30,000 அனுப்பியதாகக் கூறிய அந்த நபர் கூடுதலாக அனுப்பிய பணத்தைத் திருப்பி அனுப்புமாறு கேட்டிருக்கிறார். மருத்துவமனையில் பணம் செலுத்த வேண்டியிருப்பதால் உடனே பணத்தை அனுப்புமாறும் வற்புறுத்தி இருக்கிறார்.

அப்போது தனக்கு வந்த எஸ்எம்எஸ்களை நன்றாக கவனித்த அதிதி அவை வங்கியிலிருந்து வரவில்லை என்றும் 10 இலக்க தொலைபேசி எண்ணிலிருந்து வந்திருக்கிறது என்றும் அறிந்தார். உடனடே தனது வங்கிக் கணக்கையும் சரிபார்த்த அதிதி, தனக்குத் தெரியாமல் பணம் எடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளார்.

பிறகு, மீண்டும் அந்த நபரை அழைத்தபோது, அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. கடைசி நேரத்தில் சுதாரித்துக் கொண்டதால் அதிதி தனது பணத்தை இழக்காமல் தப்பியுள்ளார். இந்த மோசடி முயற்சியில் தனது அனுபவத்தை அனைவரிடமும் சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

வெறும் 500 க்கு கிடைக்கும் மினி ஏசி! கோடையில் சூட்டைத் தணிக்கும் கூலான ஐடியா!