அடித்து உதைத்த கணவர்.. கரு கலையும் அபாயம் - அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்ட நடிகை

அடித்து உதைத்த கணவர்.. கரு கலையும் அபாயம் - அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்ட நடிகை

Published : Oct 06, 2022, 03:31 PM IST

கணவர் அடித்து துன்புறுத்தியதால் தனக்கு எப்போது வேண்டுமானாலும் கருகலையும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக நடிகை திவ்யா ஸ்ரீதர் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

செவ்வந்தி சீரியலில் நடித்து பிரபலமானவர் திவ்யா ஸ்ரீதர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு கேளடி கண்மணி என்கிற சீரியலில் நடித்தபோது அதே சீரியலில் தன்னுடன் நடித்த சக நடிகரான அர்னவ் என்பவர் மீது திவ்யாவுக்கு காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

ஒருகட்டத்தில் திவ்யா கர்ப்பமானதை அடுத்து இருவரும் இஸ்லாமிய முறைப்படி கடந்த ஜூன் மாதம் பதிவு திருமணம் செய்துகொண்டனர். திருமணமானதை ரகசியமாக வைத்திருந்த இந்த ஜோடி, கடந்த சில வாரத்துக்கு முன்னர் தான் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில், கணவர் அடித்து துன்புறுத்தியதால் தனக்கு எப்போது வேண்டுமானாலும் கருகலையும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக நடிகை திவ்யா ஸ்ரீதர் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... திருமணத்தை மறைத்த செவ்வந்தி சீரியல் நடிகை..தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ஷாக் பதிவு

அவர் வாங்கிய கடனையெல்லாம் தான் அடைத்து வந்ததாகவும், வேலை இல்லை என்பதை எண்ணி அவர் கஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதால் அவரை நன்றாக கவனித்து வந்ததாகவும் அந்த வீடியோவில் உருக்கமாக பேசியுள்ள திவ்யா, கணவர் தன்னை அடித்ததில் தனக்கு வயிற்றில் அடிபட்டதாகவும், பின்னர் காலால் மிதித்ததில் மயக்கம் அடைந்துவிட்டதாக கூறியுள்ளார்.

மயக்கம் தெளிந்தவுடன் கண்விழித்து பார்த்தபோது தனது கணவர் அங்கே இல்லை என்றும் பின்னர் வயிறு வலி ஏற்பட்டு பிளீடிங் ஆக ஆரம்பித்ததும் மருத்துவமனைக்கு வந்ததாக அந்த வீடியோவில் கண்ணீர் மல்க பேசி உள்ளார் திவ்யா. அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அர்னவ்வை திட்டித்தீர்த்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்.... 'இந்தியன் 2' படத்தில் நடிக்க சத்யராஜ் கேட்ட சம்பளம் இவ்வளவா..? ஷாக்கான ஷங்கர்..! தீயாய் பரவும் தகவல்..!

மிஷ்கின் பாட்டுக்கு செம டான்ஸ்; வைரலாகும் பிக் பாஸ் சவுந்தர்யாவின் வீடியோ!
00:22பிக் பாஸ் வீடு; ரீ-என்ட்ரி கொடுத்த சாச்சனா - வந்த கையோடு அவருக்கு பிக் பாஸ் கொடுத்த எச்சரிக்கை! என்ன அது?
00:58அன்ஷிதாவை நாமினேட் செய்த அர்னவ்; நோஸ் கட் கொடுத்து சைலன்டாக்கிய பிக் பாஸ் - ஏன்? வீடியோ!
Bigg Boss Tamil Season 8 : மக்கள் செல்வன் வழிநடத்தும் பிக் பாஸ் சீசன் 8 - வெளியான போட்டியாளர்களின் பட்டியல்!
03:24Bigg Boss Season 8 : விஜய் சேதுபதி மாஸாக அசத்திய பிக் பாஸ் ப்ரோமோ.. உருவானது எப்படி? வெளியான டக்கர் வீடியோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீக்ரெட்; புதிய ஆங்கர் விஜய் சேதுபதி குறித்து மாயா சொன்னது என்ன தெரியுமா? - வீடியோ
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழக்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
02:17Actor KPY Bala : எளியவர்களை தேடிச்செல்வேன்.. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுவேன் - KPY பாலா நெகிழ்ச்சி!
583:20bigg boss 6 promo : காலில் விழுந்தும் கேட்காததால் கடுப்பான ஜனனி..குயின்சியை விளாசும் ப்ரோமோ இதோ
583:20நீயெல்லாம் ஜீரோ.... மகேஸ்வரியை வெளுத்து வாங்கிய அசீம் - மீண்டும் வெடித்த சண்டையால் பரபரக்கும் பிக்பாஸ் வீடு