தாங்கள் இருவரும் விளம்பரத்தில் நடித்த போது எடுத்த படம் என கூறி திருமணம் குறித்த செய்தியை மறுத்திருந்தனர்.

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி தொடர் ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெற்று வருகிறது. நாயகன் தனது முன்னாள் காதலிக்கும் தனக்கும் பிறந்த குழந்தையை மனைவிக்கு தெரியாமல் வளர்க்கும் கதைக்களமாக ஒளிபரப்பாகி வருகிறத., இதற்கிடையே தங்கையின் திருமணம், தம்பி மனைவியின் சூழ்ச்சி என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் நாயகியாக திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார். முன்னதாக 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலம் அறிமுகமாகியிருந்தவர் திவ்யா ஸ்ரீதர்.

அந்த சீரியலில் நடித்த போது திவ்யா - அர்னவ் இடையே காதல் மலர்ந்ததாகவும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. அது குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியானது. ஆனால் இந்த புகைப்படங்கள் குறித்து மறுப்பு தெரிவித்து இருந்த அந்த ஜோடிகள் தாங்கள் இருவரும் விளம்பரத்தில் நடித்த போது எடுத்த படம் என கூறி திருமணம் குறித்த செய்தியை மறுத்திருந்தனர்.

மகனின் திருமணத்தை நிறுத்த புறப்பட்ட தந்தை.. மணமகன் கோபி என அறிந்து ஷாக்காகவும் பாக்யா : இன்றைய எபிசோட்

View post on Instagram

என் குழந்தைக்கு பாரதி தான் அப்பா..புது குண்டை போடும் வெண்பா...என்னங்க டுவிஸ்ட் இது?

இந்நிலையில் சமீபத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட திவ்யா ஸ்ரீதர் "சமூகத்தில் எங்கள் அழகான பயணம் 2017ல் தொடங்கியது. கேளடி கண்மணியில் நாங்கள் ஒருவரை ஒருவர் அறிந்தோம். அது உண்மையான புரிதல் வரை நீடித்தது. இறுதியாக நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒன்றாக பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளோம். அதனால் விஷயங்களை இன்னும் அழகாக மாற்ற முடியும் ஐந்து வருட ஒற்றுமை, அன்பு, கவனிப்பு, சண்டைகள், வாக்குவாதங்கள் ஆனால் இன்னும் இரு வேறு மரபுகளில் நாங்கள் இணைந்திருந்தால் பல நல்ல உள்ளங்களால் ஆசீர்வதிக்கப்பட்டதால் நாங்கள் நிச்சயமாக அதிர்ஷ்டசாலி ஜோடிகள் என நினைக்கிறேன்.

View post on Instagram

எங்கள் சொந்த கனவு இல்லத்தில் காலடி எடுத்து வைப்பதன் மூலம் எங்கள் வாழ்வில் மிகப்பெரிய இலக்கை அடைந்துள்ளோம். இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையில் மிக அற்புதமான மற்றும் பொறுப்பான அத்தியாயத்திற்கு நுழைந்துள்ளோம். விரைவில் நாங்கள் குழந்தையை எதிர்பார்க்கிறோம் என மிக நீண்ட பதிவை இட்டிருந்தார். இந்த ஜோடிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View post on Instagram