2026 தனித்துப் போட்டியா அல்லது கூட்டணி அமைத்து போட்டியா என்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.கட்சியை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க தனது முகம் மட்டும் போதாது என உணர்ந்துள்ள விஜய் வேறு கட்சிகளில் இருக்கும் நிர்வாகிகளையும் கட்சிக்குள் இழுக்க முயற்சித்து வருகிறார். அதன் பயனாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா, அதிமுகவிலிருந்து சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன், சில நடிகர்கள் தற்போது விஜய் கட்சியில் இணைந்துள்ளனர்.