Ajmal Khan | Published: Jan 31, 2025, 2:23 PM IST
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் எல்லா பிரச்சினையிலும் அரசுக்கு எதிராக செயல்படுகிறார் அது எங்களுக்கு நல்லது தான் தொடர்ந்து ஆளுநர் இதை செய்ய வேண்டும் ஆளுநர் இவ்வாறு செயல்பட செயல்பட எங்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் வேகம் வருகிறது ஆளுநரின் செயல்பாடு திமுக ஆட்சிக்கு சிறப்பு சேர்க்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.