கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களான கொங்கு மெஸ் உரிமையாளர் மணி, சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி, அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.அதுமட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி வசம் உள்ள மதுவிலக்குத்துறையின் கீழ் இயங்கும் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை மேலாண் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.