நேற்றிரவு சென்னை வந்த பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷாவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.இந்நிலையில் அமித் ஷா RSS அமைப்பின் உறுப்பினரும் பத்திரிகை ஆசிரியர் திரு குருமூர்த்தியின் இல்லத்திற்கு சென்று அவருடன் ஆலோசனை நடத்தினார்.