காடுவெட்டி குருவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய பாமகவினர்

Feb 1, 2023, 5:31 PM IST

மறைந்த வன்னியர் சங்க தலைவரும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குருவின் 62 வது பிறந்தநாள் இன்று பாமக கட்சியினரால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பாமக முன்னால் மாநில துணைச் செயலாளர் வைத்தி தலைமையில் திரண்ட பாமகவினர் ஜெயங்கொண்டம் காந்தி சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காடுவெட்டி குருவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காடுவெட்டி குருவின் பிறந்தநாள் பாமக கட்சியினரால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.