முதல் முறையாக தேர்தலை சந்தித்துள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆளும், ஆண்ட கட்சிகளான அதிமுக, திமுகவைப் பின்னுக்குத் தள்ளி பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி தவெக 104, அதிமுக 75, திமுக 56 தொகுதிகளில் முன்னிலைப் பெற்று வருகின்றனர்.

04:02 PM (IST) May 04
தமிழக வெற்றிக் கழகத்தின் கொளத்தூர் தொகுதி வேட்பாளர், விஎஸ் பாபு தன்னை எதிர்த்து போட்டியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி வாகை சூடி இருக்கிறார்.
02:37 PM (IST) May 04
02:08 PM (IST) May 04
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையை நெருங்கி வருகிறது. முதல் தேர்தலிலேயே 107 இடங்களில் முன்னிலை பெற்று, திமுக, அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
01:29 PM (IST) May 04
தவெக, அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் திரைமறைவில் இருந்து இந்த ஆட்சியை இயக்கப்போவது பாஜகவாக இருக்கும் என்று அதிர்ச்சி தகவல்கள் கூறுகின்றன.
01:09 PM (IST) May 04
நடிகர் விஜய், மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்தி, தனது ரசிகர் பட்டாளம் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் பிரச்சாரம் செய்து, திமுக மற்றும் அதிமுக போன்ற பெரிய கட்சிகளை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்துள்ளார்.
01:02 PM (IST) May 04
திமுக கூட்டணியின் முதல் வெற்றி (காங்கிரஸ் மேலூர்) வெற்றி பெற்றுள்ளது.
12:48 PM (IST) May 04
2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் அதன் பின்னர் என்ன நடக்கும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
12:45 PM (IST) May 04
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு, முதல்வர் மு.க. ஸ்டாலினை விட 2,278 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று 'ஜெயண்ட் கில்லராக' உருவெடுத்துள்ளார்.
12:15 PM (IST) May 04
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதி நிலவரத்தை பார்க்கலாம்.
11:53 AM (IST) May 04
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை "ஸ்டாலின் அங்கிள்" என்று அழைத்தது திமுகவை நிலைகுலையச் செய்துள்ளது. இந்த மென்மையான அணுகுமுறை இளைஞர்கள் மற்றும் பெண்களை ஈர்த்ததோடு, திமுகவின் ஆக்ரோஷமான அரசியல் போக்கை மழுங்கச் செய்துள்ளது.
11:52 AM (IST) May 04
தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும் மட்டும் போட்டி என தொடர்ந்து கூறிவந்த விஜய், இப்போது அதனை செயலில் நிரூபித்துள்ளார். ஏனெனில் திமுகவின் வாக்கு வங்கி முழுமையாக சரிந்துள்ளது.
11:29 AM (IST) May 04
TVK VIjay vs NTK Seeman : தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியில் மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டுள்ளது. விஜயின் அரசியல் வருகை சீமானின் அரசியலை எப்படி பாதிக்கும் என்பது குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
11:27 AM (IST) May 04
தமிழக வெற்றி கழகம் 110க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், கட்சியின் தலைவர் விஜய்யின் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
11:19 AM (IST) May 04
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை உருவாகியுள்ளது. முதல் தேர்தலை சந்திக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் முன்னிலை.
11:18 AM (IST) May 04
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 100 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. இந்த தேர்தலில் விஜய் போட்ட தப்பு கணக்கு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
11:11 AM (IST) May 04
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) 103 தொகுதிகளில் முன்னிலை பெற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திமுக 52 தொகுதிகளுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், முதல்வர் ஸ்டாலின் தனது தொகுதியிலேயே பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
11:10 AM (IST) May 04
10:35 AM (IST) May 04
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தவெக கட்சி எதிர்பாராத விதமாக 94 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 68 இடங்களிலும், திமுக 49 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதால், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.
10:27 AM (IST) May 04
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 100 தொகுதிகளில் முன்னிலை பெற்று, திமுக மற்றும் அதிமுகவுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த எழுச்சி நீடிக்குமா என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரியவரும்
10:23 AM (IST) May 04
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், காலை 10 மணி நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:20 AM (IST) May 04
Chennai Election Result: 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆளும் திமுக மற்றும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
09:59 AM (IST) May 04
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
09:37 AM (IST) May 04
09:30 AM (IST) May 04
அதிமுகவின் கோட்டையாக இருந்த சென்னையில் ஒரு சில தொகுதிகளில் திமுக கடந்த முறை வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இந்த முறை சென்னையின் 16 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் முன்னிலை வகிப்பதால் அதிமுக, திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
09:22 AM (IST) May 04
TVK Vijay: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 49 இடங்களிலும், நடிகர் விஜய்யின் தவெக 68 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
09:14 AM (IST) May 04
போட்டியிட்டு முதல் தேர்தலை சந்தித்துள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகம் அதிமுக, திமுகவை பின்னுக்கு தள்ளி தவெக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தவெக 60, திமுக 51, அதிமுக 39 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.
08:59 AM (IST) May 04
தமிழக சட்டமன்றத் தேர்தலின் தபால் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திமுக கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அமைச்சர் கே.என். நேரு, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய திமுக தலைவர்கள் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களிடம் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
08:55 AM (IST) May 04
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் விஜய்யை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா ஒரு வாக்கு கூட பெறாததது அதிர்ச்சை உருவாக்கி உள்ளது.
08:48 AM (IST) May 04
08:36 AM (IST) May 04
234 தொகுதிகளிலும் பதிவான தபால் வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இதில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின்,
பெரம்பூர் தொகுதியில் ஜோசப் விஜய்,
சேபாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின்,
எடப்பாடி தொகுதியில் பழனிசாமி,
ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்று வருகின்றனர்.
08:07 AM (IST) May 04
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டியதற்கான காரணங்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
07:23 AM (IST) May 04
07:07 AM (IST) May 04
அண்மையில் கட்சி தொடங்கி முதல் தேர்தலை சந்தித்துள்ள விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் பெரும் குடைச்சலை கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான தொகுதிகளில் தவெக இரண்டாவது இடத்தை பிடிக்குமென கணிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 98-120 இடங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதாகக் கூறுகிறது. இது திமுக, அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சுட்டிக்காட்டுகிறது.
06:57 AM (IST) May 04
தேர்தலில் வெற்றி பெறுவது ஒருபுறம் இருக்க, செலுத்திய பிணைத்தொகையை தக்கவைத்து தன் கௌரவத்தை காப்பதே பலருக்கு சவாலாக உள்ளது. பதிவான வாக்குகளில் 1/6 பங்கை பெற தவறினால், ஒரு வேட்பாளர் தன் டெபாசிட் தொகையோடு சேர்த்து அரசியல் அங்கீகாரத்தையும் இழக்க நேரிடும்.
06:39 AM (IST) May 04
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கும் சில முக்கிய நட்சத்திர வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் தொகுதிகள்:
மு.க. ஸ்டாலின் (திமுக): கொளத்தூர்
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): எடப்பாடி
விஜய் (தவெக): பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு
சீமான் (நாதக): காரைக்குடி
ஓ. பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூர்
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): விருத்தாசலம்
உதயநிதி ஸ்டாலின் (திமுக): சேப்பாக்கம், திருவள்ளிக்கேனி
செங்கோட்டையன் (தவெக): கோபிசெட்டிபாளையம்
முக்கிய கட்சித் தலைவர்கள் தங்களின் கோட்டை எனக் கருதப்படும் தொகுதிகளிலும், புதிய வரவான விஜய் இரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.
06:30 AM (IST) May 04
சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்
திமுக கூட்டணி 145 முதல் 160 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 50 முதல் 65 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழக அரசியலில் எதிர்பார்க்கப்பட்ட தவெக 13 முதல் 18 தொகுதி வெற்றி பெறும். பிற 5 முதல் 8 தொகுதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டிடிவி பீப்பிள்ஸ் பல்ஸ்
திமுக கூட்டணி 125 முதல் 145 இடங்களிலும், அதிமுக கூட்டணி 65 முதல் 80 இடங்களிலும், தவெக 18 முதல் 24 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற 2 முதல் 6 இடங்களில் வெற்றி பெறும்.
மேட்ரிஸ்
திமுக கூட்டணி 122 முதல் 132 இடங்களிலும், அதிமுக கூட்டணி 87 முதல் 110 இடங்களிலும், தவெக 10 முதல் 12 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற 0 முதல் 6 இடங்களில் வெற்றி பெறும். பெருவாரியான கருத்து கணிப்புகள் மீண்டும்திமுக ஆட்சி அமைக்கும்.
ரிபப்ளிக் பி மார்க்
திமுக கூட்டணி 125 முதல் 145 இடங்களிலும், அதிமுக கூட்டணி 65 முதல் 85 இடங்களிலும், தவெக 10 முதல் 12 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற 16 முதல் 26 இடங்களில் வெற்றி பெறும். பெருவாரியான கருத்து கணிப்புகள் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது