MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • சீமானின் கதையை மொத்தமாக முடித்துவிட்ட விஜய்.! அதல பாதாளத்தில் நாம் தமிழர் கட்சி.! இனி நாதக என்னவாகும்?

சீமானின் கதையை மொத்தமாக முடித்துவிட்ட விஜய்.! அதல பாதாளத்தில் நாம் தமிழர் கட்சி.! இனி நாதக என்னவாகும்?

TVK VIjay vs NTK Seeman : தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியில் மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டுள்ளது. விஜயின் அரசியல் வருகை சீமானின் அரசியலை எப்படி பாதிக்கும் என்பது குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : May 04 2026, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamilnadu Assembly Election Results 2026
Image Credit : Google

Tamilnadu Assembly Election Results 2026

தமிழ்நாடு இதுவரை கண்டிராத வித்தியாசமான தேர்தல் முடிவுகளை தற்போது சந்தித்து வருகிறது. இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறி வந்த நிலையில், அதை தலைகீழாக மாற்றி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 100 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாம் இடத்தில் அதிமுகவும், மூன்றாம் இடத்தில் திமுகவும் இருந்து வருகிறது. நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறாத நிலை இருந்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
விஸ்வரூபம் எடுத்த விஜய்
Image Credit : Asianet News

விஸ்வரூபம் எடுத்த விஜய்

சீமான் கடந்த 15 ஆண்டுகளாக பேசி வந்த மாற்று அரசியல், திராவிட ஆரிய எதிர்ப்பு மற்றும் இளைஞர்களை கவரும் ஆவேசமான பேச்சு ஆகிய அதே தளத்தில் விஜயும் கால் பதித்துள்ளார். சீமானின் பலமாக இருந்த இளைஞர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் புதிய வாக்காளர்கள் தற்போது விஜயின் பக்கம் சாய்ந்துள்ளனர். திமுக, அதிமுக பிடிக்காமல் சீமானுக்கு வாக்களித்து வந்த ப்ளோட்டிங் வாக்குகள் (Floating Votes) தற்போது வலுவான நட்சத்திர அந்தஸ்தை கொண்ட விஜயை நோக்கி நகர்ந்து உள்ளது. சீமானின் இடத்தை தற்போது விஜய் முழுமையாக ஆக்கிரமித்துள்ளார்.

Related Articles

Related image1
TVK AIADMK Alliance: தமிழக அரசியலில் 50 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? 118-ஐ நெருங்கும் விஜய்! அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி அமையுமா?
Related image2
திமுகவா? தவெகவா? நிலவும் கடும் போட்டி.! 2026 தேர்தலில் வெல்லப்போவது யார்? ஜோதிட கணிப்புகள் கூறுவது என்ன?
35
நாம் தமிழர் கட்சியின் கதை முடிந்துவிட்டதா?
Image Credit : X/Seeman

நாம் தமிழர் கட்சியின் கதை முடிந்துவிட்டதா?

நாம் தமிழர் கட்சி ஒரு வலுவான கட்டமைப்பை வைத்திருந்தாலும் விஜயின் ரசிகர்கள் மன்றங்கள் மற்றும் தற்போதைய அரசியல் எழுச்சி அந்த கட்டமைப்பிற்கு போட்டியாக உருவெடுத்துள்ளது. இதுவரை மாற்று அரசியலின் முகமாக ஊடகங்களில் அதிக விவாதிக்கப்பட்ட சீமானின் இடத்தை விஜய் ஆக்கிரமித்து இருக்கிறார். பெரிய கட்சிகளை எதிர்கொள்ள தேவையான பண பலத்தில் விஜயுடன் ஒப்பிடும்பொழுது சீமான் பின் தங்கியே இருக்கிறார். தற்போதைய தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும் பொழுது நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி கணிசமாக சரிந்து உள்ளது. தேர்தல் முடிவுகளை பார்க்கும் பொழுது நாம் தமிழரின் கதை முடிந்து விட்டது என்றே சொல்லலாம்.

45
முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் சீமான்
Image Credit : Seeman

முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் சீமான்

நாம் தமிழர் கட்சிக்கு என்று குறிப்பிட்ட கோர் வாக்காளர்கள் (Core Voters) உள்ளனர். அவர்கள் தமிழ் தேசிய கொள்கைக்காக மட்டுமே வாக்களிப்பவர்கள். அவர்கள் விஜயை அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டார்கள். பல தேர்தல்களை சந்தித்து 7% முதல் 8% வரை வாக்கு வங்கியை சேர்த்தவர் சீமான். இந்த வீழ்ச்சியை அவர் எப்படி சமாளிப்பார் என்பது அடுத்த கட்ட வியூகத்தை பொறுத்து அமையும். இதுவரை தனித்துப் போட்டி என்று முழங்கிய சீமான் இனி வரும் காலங்களில் இருப்பை தக்க வைக்க வேறு சில அரசியல் முடிவுகள் அல்லது கூட்டணி கணக்குகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம்.

55
புதிய பரிமாணத்திற்கான தொடக்கம்
Image Credit : Google

புதிய பரிமாணத்திற்கான தொடக்கம்

விஜயின் அரசியல் வருகை தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி ஆகியவை சீமானுக்கு ஒரு அரசியல் செக் வைத்திருப்பது என்பது நிஜம். சீமான் போன்ற போராட்ட குணமிக்க அரசியல்வாதி தோற்பது என்பது உண்மையிலேயே அரசியலில் ஒரு பின்னடைவு தான். ஆனால் நாம் தமிழர் கட்சியின் முடிவுரையாக இந்த தேர்தல் இருக்காது. மாறாக அது நாம் தமிழர் கட்சியின் புதிய பரிமாணத்திற்கான தொடக்கமாக இருக்கலாம். இனி வரும் காலங்களில் சீமான் தனது பேச்சை குறைத்துவிட்டு செயலிலும் யூகத்திலும் கவனம் செலுத்தினால் மட்டுமே விஜய் அலையை கடக்க முடியும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு சட்டமன்றம்
தேர்தல்
தேர்தல் முடிவு

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Recommended image2
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!
Recommended image3
அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
Related Stories
Recommended image1
TVK AIADMK Alliance: தமிழக அரசியலில் 50 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? 118-ஐ நெருங்கும் விஜய்! அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி அமையுமா?
Recommended image2
திமுகவா? தவெகவா? நிலவும் கடும் போட்டி.! 2026 தேர்தலில் வெல்லப்போவது யார்? ஜோதிட கணிப்புகள் கூறுவது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved