MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TVK AIADMK Alliance: தமிழக அரசியலில் 50 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? 118-ஐ நெருங்கும் விஜய்! அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி அமையுமா?

TVK AIADMK Alliance: தமிழக அரசியலில் 50 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? 118-ஐ நெருங்கும் விஜய்! அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி அமையுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை உருவாகியுள்ளது. முதல் தேர்தலை சந்திக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் முன்னிலை.

2 Min read
Author : vinoth kumar
Published : May 04 2026, 11:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

தமிழக சட்டமன்ற முன் எப்போதும் இல்லாத வகையில் மும்முறை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்நிலையில் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் ஆளும் திமுகவும், எதிர்கட்சியான அதிகமுகவும் ஒரு வித பீதியுடன் இருந்து வந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : Asianet News

இதற்கு காரணம் விஜய்யின் அரசியல் வருகை தான். சுமார் 12.5 லட்சம் புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் எங்கே சென்றுள்ளன என்பதுதான் இந்த தேர்தலில் புரியாத புதிராக இருந்து வந்தது. மும்முறை தமிழக சட்டமன்ற தேர்தலில் தொங்கு சட்டசபை அமைய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். இந்த தேர்தல் முடிவுகளில் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ 118 இடங்கள் கிடைக்கவில்லை என்றால், அந்த நிலையைத்தான் தொங்கு சட்டசபை (Hung Assembly) என்று கூறுவார்கள்.

Related Articles

Related image1
Chennai Election Result: தலைநகர் சென்னையில் திமுகவுக்கு செக்.! 16 தொகுதிகளில் தவெக முன்னிலை.. கதறும் ஸ்டாலின், உதயநிதி!
Related image2
3ம் இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக... கில்லி போல் சொல்லி அடிக்கும் தவெக - 10 மணி நிலவரம் இதோ
35
Image Credit : X

இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்கு இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் ஆளும் திமுக முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி 108 தொகுதிகளில் தவெகவும், அதிமுக 75 தொகுதிகளிலும், ஆளும் திமுக 49 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

45
Image Credit : Asianet News

தற்போதைய நிலவரப்படி, எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத 'தொங்கு சட்டசபை' (Hung Assembly) ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக முதல் தேர்தலை சந்தித்த கட்சியான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அசுர பலத்துடன் முன்னிலை பெற்றுள்ளது. மற்றொரு புறம் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை தவெக நெருங்கி வருகிறது.

55
Image Credit : Asianet News

தவெக அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தவெக முதலமைச்சர் பதவியை கோரலாம். அதிமுக முக்கியமான அமைச்சரவை பதவிகளைப் பெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் 50 ஆண்டுகால திமுக - அதிமுக என்ற இருமுனைப் போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
அரசியல்
மு. க. ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஸ்டாலினையே தோற்கடித்தவருக்கு அமைச்சரவையில் இடமில்லை ! வி.எஸ்.பாபுவை விஜய் மறந்தது ஏன்? பின்னணி!
Recommended image2
Now Playing
TVK கூட்டணி, DMK ஆட்சி சர்ச்சை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி பேட்டி!
Recommended image3
Now Playing
CM Vijay Cabinet : முதல்வர் விஜய்யின் கேபினட்டில் அமைச்சராக அரியணை ஏறிய 4 சிங்கப்பெண்கள் யார்..யார்?
Related Stories
Recommended image1
Chennai Election Result: தலைநகர் சென்னையில் திமுகவுக்கு செக்.! 16 தொகுதிகளில் தவெக முன்னிலை.. கதறும் ஸ்டாலின், உதயநிதி!
Recommended image2
3ம் இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக... கில்லி போல் சொல்லி அடிக்கும் தவெக - 10 மணி நிலவரம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved