MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 3ம் இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக... கில்லி போல் சொல்லி அடிக்கும் தவெக - 10 மணி நிலவரம் இதோ

3ம் இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக... கில்லி போல் சொல்லி அடிக்கும் தவெக - 10 மணி நிலவரம் இதோ

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், காலை 10 மணி நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 04 2026, 10:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Tamilnadu Election Vote Counting
Image Credit : Asianet News

Tamilnadu Election Vote Counting

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் என முக்கிய மாநிலங்களில் உள்ள 823 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து காலை 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இந்த முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் ஆணையத்தின் 10 மணி நிலவரப்படி, அதிமுக கூட்டணி 78 இடங்களிலும், முதல்முறையாக களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 103 இடங்களிலும், திமுக கூட்டணி 48 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

23
10 மணி நிலவரம்
Image Credit : X

10 மணி நிலவரம்

118 தொகுதிகள் வென்றால் தான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். தற்போது 10 மணி நிலவரப்படி, எந்த கட்சியும் தனிப் பெரும்பான்மையை பெற முடியவில்லை. இதனால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்பு உள்ளது. 1952க்கு பின்னர் எந்த ஒரு தேர்தலிலும் தொங்கு சட்டசபை அமையவில்லை. இதனால் இந்த ஆண்டு தொங்கு சட்டசபை அமையுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Related Articles

Related image1
போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் திமுக-வை பந்தாடும் விஜய்... அடேங்கப்பா இத்தனை ஓட்டு லீடிங்கா?
Related image2
முதல்வர் ஆகிறார் விஜய்.. திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளிய தவெக.. ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு
33
பிற மாநில நிலவரம்
Image Credit : instagram

பிற மாநில நிலவரம்

கேரளா நிலவரம்

இதுதவிர கேரளாவை பொறுத்தவரை, LDF கூட்டணியை விட UDF கூட்டணி கணிசமான முன்னிலையில் உள்ளது. தேர்தல் ஆணையத்தின்படி, UDF 52 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் கூட்டணியின் பெரிய கட்சியான காங்கிரஸ் 49 இடங்களில் முன்னிலையில் உள்ளது. LDF கூட்டணி 21 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், இதில் CPI (M) கட்சி மட்டும் 41 இடங்களில் முன்னிலை வகிப்பதாக தரவுகள் காட்டுகின்றன. இருப்பினும், செய்தி சேனல்களின்படி, UDF 85 இடங்களில் முன்னிலை பெற்று, ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நெருங்கி வருகிறது.

மேற்கு வங்கம் நிலவரம்

மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கும் திரிணாமூல் காங்கிரஸுக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது. பாஜக 16 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், செய்தி சேனல்களின் தரவுகள்படி, பாஜக 130 இடங்களிலும், திரிணாமூல் 110 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

அசாம் நிலவரம்

அசாமில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆரம்பம் முதலே வலுவான முன்னிலையில் உள்ளது. தேர்தல் ஆணையத்தின்படி, NDA 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் பாஜக 32 இடங்களிலும், AGP 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. செய்தி சேனல்களின் தகவல்படி, பாஜக 85 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால், ஹிமந்தா பிஸ்வா சர்மா மீண்டும் முதல்வராகப் பதவியேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TVK Vijay: காலை முதல் காதை பிளந்த விசில் சத்தம்.! சுனாமியாய் திமுக, அதிமுகவை அடித்து நொருக்கிய விஜய்.!
Recommended image2
Chennai Election Result: தலைநகர் சென்னையில் திமுகவுக்கு செக்.! 16 தொகுதிகளில் தவெக முன்னிலை.. கதறும் ஸ்டாலின், உதயநிதி!
Recommended image3
ஸ்டாலின், உதயநிதி உட்பட.. 34 அமைச்சர்களில் 31 பேர் பின்னடைவு.. கலங்கும் திமுகவினர்
Related Stories
Recommended image1
போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் திமுக-வை பந்தாடும் விஜய்... அடேங்கப்பா இத்தனை ஓட்டு லீடிங்கா?
Recommended image2
முதல்வர் ஆகிறார் விஜய்.. திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளிய தவெக.. ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved