MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிர்ச்சி.!! கொளத்தூரில் ஸ்டாலின் பின்னடைவு.. விஜயின் தவெக அதிரடி முன்னிலை

அதிர்ச்சி.!! கொளத்தூரில் ஸ்டாலின் பின்னடைவு.. விஜயின் தவெக அதிரடி முன்னிலை

தமிழக சட்டமன்றத் தேர்தலின் தபால் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திமுக கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அமைச்சர் கே.என். நேரு, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய திமுக தலைவர்கள் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களிடம் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

1 Min read
Author : Raghupati R
Published : May 04 2026, 08:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
கொளத்தூரில் ஸ்டாலின் பின்னடைவு
Image Credit : Asianet News

கொளத்தூரில் ஸ்டாலின் பின்னடைவு

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், ஆரம்பகட்ட தகவல்கள் ஆளும் திமுக கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தபால் வாக்கு எண்ணிக்கையில் பல முக்கிய இடங்களில் எதிர்பாராத மாற்றங்கள் பதிவாகி வருகின்றன.

திருச்சி மேற்கு: நேருவுக்கு பின்னடைவு

திருச்சி மேற்கு தொகுதியில் மூத்த அமைச்சரான K. N. நேரு தபால் வாக்குகளில் பின்னடைவை சந்தித்துள்ளார். தற்போது வரை எண்ணப்பட்ட வாக்குகளில் அவர் 4,261 வாக்குகள் பெற்றிருக்க, எதிர்ப்பாராத முறையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் 4,535 வாக்குகளுடன் 292 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். இந்த முன்னிலை அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய கட்சியின் எழுச்சி

முக்கிய அமைச்சருக்கு எதிராக ஒரு புதிய கட்சி வேட்பாளர் முன்னிலை பெறுவது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் பல இடங்களில் தன்னுடைய தாக்கத்தை வெளிப்படுத்துவதாக இந்த ஆரம்ப தகவல்கள் காட்டுகின்றன.

22
பல அமைச்சர்கள் பின்னடைவு
Image Credit : instagram

பல அமைச்சர்கள் பின்னடைவு

இது ஒரே தொகுதியில் மட்டுமல்ல. மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திருமயம் தொகுதியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆலந்தூர் தொகுதியில் டி.எம்.அன்பரசன் மற்றும் காட்பாடியில் துரைமுருகன் ஆகியோரின் தபால் வாக்குகளில் பின்னடைவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல முதல்வர் மு.க ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் தவெக முன்னிலை பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

வாக்காளர்களின் மனநிலை மாறுமா?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் வாக்குகள் அதிகமாக இருக்கும் தபால் வாக்குகளில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், அவர்களின் மனநிலை ஆளும் கட்சிக்கு எதிராக மாறியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தொடர்ந்து வரும் எண்ணிக்கைகள் தான் இறுதி நிலையை தீர்மானிக்கின்றன.

Related Articles

Related image1
முதல் தேர்தலிலேயே அதிரடி.. தபால் வாக்குகளில் திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளிய விஜய்
Related image2
விஜய் வாகனத்தை பின்தொடர வேண்டாம்.. விதிமுறை மீறினால் வாகனம் பறிமுதல்.. காவல்துறை எச்சரிக்கை!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
தமிழக வெற்றி கழகம்
திமுக
தேர்தல்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய் வாகனத்தை பின்தொடர வேண்டாம்.. விதிமுறை மீறினால் வாகனம் பறிமுதல்.. காவல்துறை எச்சரிக்கை!
Recommended image2
முதல் தேர்தலிலேயே அதிரடி.. தபால் வாக்குகளில் திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளிய விஜய்
Recommended image3
நாடே உற்றுநோக்கும் தமிழக தேர்தல் முடிவுகள்: ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் இரண்டாம் வாய்ப்பு எதனால் அவசியம்?
Related Stories
Recommended image1
முதல் தேர்தலிலேயே அதிரடி.. தபால் வாக்குகளில் திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளிய விஜய்
Recommended image2
விஜய் வாகனத்தை பின்தொடர வேண்டாம்.. விதிமுறை மீறினால் வாகனம் பறிமுதல்.. காவல்துறை எச்சரிக்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved