MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? தமிழ்நாட்டில் அடுத்து நடக்கப்போவது என்ன?

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? தமிழ்நாட்டில் அடுத்து நடக்கப்போவது என்ன?

2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் அதன் பின்னர் என்ன நடக்கும்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : May 04 2026, 12:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
110 தொகுதிகளில் தவெக முன்னிலை
Image Credit : Asianet News

110 தொகுதிகளில் தவெக முன்னிலை

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் புது வரவான விஜயின் தமிழக வெற்றிக் கழகம் புதிய சாதனையை படைத்து வருகிறது. சந்தித்த முதல் தேர்தலிலேயே சுமார் 110 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவை 118 இடங்கள் என்று இருக்கும் நிலையில், தவெக 110 இடங்களிலும், அதிமுக 70 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

26
தொங்கு சட்டமன்றம்
Image Credit : our own

தொங்கு சட்டமன்றம்

மொத்தமுள்ள சட்டமன்ற தொகுதிகளில் பாதிக்கும் அதிகமான இடங்களை பிடிப்பவர்களே ஆட்சி அமைக்க முடியும் என்று அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது. இது ‘தனிப் பெரும்பான்மை’ என்று அழைக்கப்படுகிறது. ஒரு கட்சிக்கு தனிப் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை என்றால், அதை ‘தொங்கு சட்டமன்றம்’ என்று அழைப்பார்கள். தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமையும் பட்சத்தில் அடுத்து என்ன நடக்கும்? கட்சிகளுக்கு ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்புகள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Related Articles

Related image1
சீமானின் கதையை மொத்தமாக முடித்துவிட்ட விஜய்.! அதல பாதாளத்தில் நாம் தமிழர் கட்சி.! இனி நாதக என்னவாகும்?
Related image2
திமுகவா? தவெகவா? நிலவும் கடும் போட்டி.! 2026 தேர்தலில் வெல்லப்போவது யார்? ஜோதிட கணிப்புகள் கூறுவது என்ன?
36
ஆளுநர் எடுக்கப்போகும் முக்கிய முடிவு
Image Credit : our own

ஆளுநர் எடுக்கப்போகும் முக்கிய முடிவு

இதுபோன்ற சூழலில் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆளுநரின் முடிவு முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிக இடங்களை வென்ற கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். ஆட்சி அமைக்க முன் வருபவர்கள் தங்களுக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்கிற கடிதத்தை ஆளுநரிடம் வழங்க வேண்டும். இந்த கடிதத்தை பெற்ற பிறகு ஆளுநர் அந்த கட்சித் தலைவருக்கு குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்குவார். 110 இடங்களில் முன்னிலை வகிக்கும் தவெகவிற்கு இன்னும் எட்டு இடங்கள் தேவைப்படுகிறது. ஒருவேளை தவெக தனித்து எட்டு இடங்களை வென்றால் தனித்தே ஆட்சி அமைக்க முடியும்.

46
அதிமுக தவெக கூட்டணி அமையுமா?
Image Credit : Asianet News

அதிமுக தவெக கூட்டணி அமையுமா?

ஒருவேளை 118 இடங்களை பெற முடியவில்லை என்றால் அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவைக் கோரலாம். ஒருவேளை அதிமுக கூட்டணிக்கு வர மறுத்துவிட்டால், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக போன்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்க முயற்சி செய்யலாம் அல்லது சிறிய கட்சிகள் சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கலாம். அதிமுக 70 இடங்களை பெற்றுள்ள நிலையில் தவெக-அதிமுக கூட்டணி அமையுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக தவெகவிற்கு ஆதரவளிக்குமா? அல்லது கூட்டணியில் இணையுமா என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

56
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி உருவாகுமா?
Image Credit : X

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி உருவாகுமா?

அதிமுக தரப்பில் கூட்டணி இல்லை என்று மூத்த தலைவர்கள் கூறி வந்தாலும், அதிகாரப் பகிர்வுக்காக இந்த பேச்சுவார்த்தைகளில் மாற்றம் ஏற்படலாம். ஒருவேளை திமுக மற்ற கட்சிகளுடன் இணைந்து ஒரு மாற்று கூட்டணியை உருவாக்க முயற்சி செய்யலாம். ஆனால் தவெக தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் அந்த கட்சிக்கு ஆட்சி அமைப்பதில் முன்னுரிமை கிடைக்கும். அமைச்சரவையை பகிர்ந்து கொள்ளும் அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் சிறு கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கலாம். இதன் மூலம் தமிழகத்தில் ஒரு கூட்டாட்சி அமையக்கூடும்.

66
குடியரசுத்தலைவர் ஆட்சி அமையுமா?
Image Credit : X

குடியரசுத்தலைவர் ஆட்சி அமையுமா?

ஒரு கட்சி ஆட்சியில் சேராமல் வாக்கெடுப்பின் பொழுது வெளியில் இருந்து தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்து ஆட்சியை காப்பாற்ற முடியும். எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதை தடுக்க கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் சூழலும் உருவாகலாம். ஒருவேளை எந்த கட்சியாலும் அல்லது கூட்டணியாலும் 15 இடங்களை நிரூபிக்க முடியவில்லை என்றால் ஆளுநர் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைப்பார். அதன் பின்னர் ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். தேர்தல் முடிவுகளின் தற்போதைய ட்ரெண்டுகளை பொறுத்து இது மாற்றம் உண்டாகலாம். இறுதி முடிவுகள் முழுமையாக வெளியான பிறகு, அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தேர்தல்
தேர்தல் முடிவு

Latest Videos
Recommended Stories
Recommended image1
திமுகவின் வியூகங்களை சிதைத்த விஜயின் ஒற்றை வார்த்தை.! "ஸ்டாலின் Uncle" கொடுத்த மரண மாஸ் ஹிட்!
Recommended image2
சீமானின் கதையை மொத்தமாக முடித்துவிட்ட விஜய்.! அதல பாதாளத்தில் நாம் தமிழர் கட்சி.! இனி நாதக என்னவாகும்?
Recommended image3
ஆட்சியை இழக்கிறது திமுக.! ஸ்டாலினுக்கு தோல்வியை கொடுத்த திங்கள் கிழமை.! என்ன காரணம்?
Related Stories
Recommended image1
சீமானின் கதையை மொத்தமாக முடித்துவிட்ட விஜய்.! அதல பாதாளத்தில் நாம் தமிழர் கட்சி.! இனி நாதக என்னவாகும்?
Recommended image2
திமுகவா? தவெகவா? நிலவும் கடும் போட்டி.! 2026 தேர்தலில் வெல்லப்போவது யார்? ஜோதிட கணிப்புகள் கூறுவது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved