MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TVK Vijay: ஆளும் திமுகவை முந்திய தவெக.. 67 இடங்களில் முன்னிலை.. அலறும் அதிமுக.. அதிர்ச்சியில் ஸ்டாலின்..

TVK Vijay: ஆளும் திமுகவை முந்திய தவெக.. 67 இடங்களில் முன்னிலை.. அலறும் அதிமுக.. அதிர்ச்சியில் ஸ்டாலின்..

TVK Vijay: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 49 இடங்களிலும், நடிகர் விஜய்யின் தவெக 68 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

1 Min read
Author : vinoth kumar
Published : May 04 2026, 09:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : AI

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மநீம, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அடங்கிய மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
Image Credit : Asianet News

அதிமுக தலைமையிலான அணியில் பாஜக, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்து தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43,291 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 4 கோடியே 87 லட்சத்து 98,833 பேர் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 85.10 சதவீதம் வாக்கு பதிவாகி இருந்தது. தவெக விஜய் வருகையால் ஓட்டு அதிகரித்து இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் யாருக்கு சாதகமாக அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரின் நிலவி வந்தது.

Related Articles

Related image1
அதிர்ச்சி.!! கொளத்தூரில் ஸ்டாலின் பின்னடைவு.. விஜயின் தவெக அதிரடி முன்னிலை
Related image2
விஜய் வாகனத்தை பின்தொடர வேண்டாம்.. விதிமுறை மீறினால் வாகனம் பறிமுதல்.. காவல்துறை எச்சரிக்கை!
33
Image Credit : Asianet News

இந்நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் தபால் வாக்கை தொடர்ந்து மின்னணு வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் திமுக அரசு 54 தொகுதிகளிலும், தமிழக வெற்றிக் கழகம் 79, அதிமுக 59 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

தற்போதைய நிலவரப்படி திருச்சி கிழக்கு, பெரம்பூர், போபிசெட்டிபாளையம், திரு.வி.க. நகர், அண்ணா நகர், மயிலாப்பூர், தி.நகர், கன்னியாகுமரி, ஸ்ரீபெரும்பத்தூர், மதுரவாயல், திண்டுக்கல், திருவண்ணாமலை போன்ற இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பெருவாரியான இடங்களில் தவெக முன்னலை வகித்து வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு, எ.வ.வேலு, ரகுபதி, அன்பில் மகேஷ், மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
மு. க. ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Crime News: அடங்காத மணிகண்டன்! அம்மாவுக்கு பிராக்கெட் போட்ட கையோடு 14 வயது பொண்ணுக்கு ஸ்கெட்ச்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
Recommended image2
Tamilnadu Rain: மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம்.. இன்றும், நாளையும் ஓயாமல் மழை ஊத்தப்போகுதாம்.. எந்தெந்த மாவட்டங்களில்?
Recommended image3
AIADMK: போதுண்டா சாமி! நீங்களும் உங்க கட்சியும்! அதிமுகவிலிருந்து தெறித்து ஓடும் முன்னாள் எம்.பி.! அதிர்ச்சியில் இபிஎஸ்
Related Stories
Recommended image1
அதிர்ச்சி.!! கொளத்தூரில் ஸ்டாலின் பின்னடைவு.. விஜயின் தவெக அதிரடி முன்னிலை
Recommended image2
விஜய் வாகனத்தை பின்தொடர வேண்டாம்.. விதிமுறை மீறினால் வாகனம் பறிமுதல்.. காவல்துறை எச்சரிக்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved