MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுக வாக்கு வங்கியில் ஓட்டை போட்ட தவெக.. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் வாக்குகளை அள்ளி சுருட்டிய விஜய்!

திமுக வாக்கு வங்கியில் ஓட்டை போட்ட தவெக.. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் வாக்குகளை அள்ளி சுருட்டிய விஜய்!

தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும் மட்டும் போட்டி என தொடர்ந்து கூறிவந்த விஜய், இப்போது அதனை செயலில் நிரூபித்துள்ளார். ஏனெனில் திமுகவின் வாக்கு வங்கி முழுமையாக சரிந்துள்ளது.

2 Min read
Author : Rayar r
Published : May 04 2026, 11:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026
Image Credit : AI

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் நடிகர் விஜய்யின் தவெக பிரம்மாண்டமான வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 234 தொகுதிகளிலும் தனித்து களம் கண்ட தவெக தற்போதைய நிலவரப்படி 109 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 75 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது ஆளுங்கட்சியான திமுக 50 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

திமுக வாக்கு வங்கியில் கைவைத்த தவெக‌

தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும் மட்டும் போட்டி என தொடர்ந்து கூறிவந்த விஜய், இப்போது அதனை செயலில் நிரூபித்துள்ளார். ஏனெனில் திமுகவின் வாக்கு வங்கி முழுமையாக சரிந்துள்ளது. திமுகவின் கோட்டையாக கருதப்படும் சென்னையில் தவெக முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையினர் வாக்குகள் முழுவதும் எப்போதும் திமுக பக்கம் இருக்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
சிறுபான்மையினர் வாக்கு வங்கி
Image Credit : Asianet News

சிறுபான்மையினர் வாக்கு வங்கி

ஆனால் இந்த முறை சிறுபான்மையினர் வசிக்கும் பெரும்பாலான தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. அதாவது கிறிஸ்தவர்கள் அதிக வசிக்கும் நாகர்கோவில், விளவங்கோடு, குளச்சல், ஆகிய தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது. மேலும் சென்னையில் கிறிஸ்தவர்கள் வசிக்கும் மயிலாப்பூர், பெரம்பூர், ஆலந்தூர் மற்றும் தாம்பரம் தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. மிக முக்கியமாக திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம் என கிறிஸ்தவர்கள் கணிசமாக வசிக்கும் தொகுதிகளில் தவெக வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

கிறிஸ்தவர்கள் வாக்குகள்

இது மட்டுமின்றி கிறிஸ்தவர்கள் வசிக்கும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் மிக பிரம்மாண்டமாக வெற்றி பெற உள்ளார். இதேபோல் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளிலும் தவெக ஆதிக்கம் அதிகம் உள்ளது. சென்னையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, துறைமுகம், வில்லிவாக்கம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திமுக வாக்கு வங்கியை தவெக சிதைத்துள்ளது.

Related Articles

Related image1
Chennai Election Result: தலைநகர் சென்னையில் திமுகவுக்கு செக்.! 16 தொகுதிகளில் தவெக முன்னிலை.. கதறும் ஸ்டாலின், உதயநிதி!
Related image2
TVK Vijay: ஆளும் திமுகவை முந்திய தவெக.. 67 இடங்களில் முன்னிலை.. அலறும் அதிமுக.. அதிர்ச்சியில் ஸ்டாலின்..
33
இஸ்லாமியர்கள் வாக்குகள்
Image Credit : Asianet News

இஸ்லாமியர்கள் வாக்குகள்

மேலும் இஸ்லாமியர்கள் நிறைந்த கோட்டையாக கருதப்படும் ராமநாதபுரத்திலும், கீழக்கரை, கடையநல்லூர் ஆகிய தொகுதிகளிலும் இடங்களில் வெற்றிபெறும் நிலையில் உள்ளது. திமுக காலம் காலமாக சிறுபான்மையினர் வாக்குகளை அறுவடை செய்து வந்த நிலையில் இந்த வாக்குகளை தவெக மொத்தமாக அள்ளியதே திமுகவின் படுதோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Crime News: அடங்காத மணிகண்டன்! அம்மாவுக்கு பிராக்கெட் போட்ட கையோடு 14 வயது பொண்ணுக்கு ஸ்கெட்ச்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
Recommended image2
Tamilnadu Rain: மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம்.. இன்றும், நாளையும் ஓயாமல் மழை ஊத்தப்போகுதாம்.. எந்தெந்த மாவட்டங்களில்?
Recommended image3
AIADMK: போதுண்டா சாமி! நீங்களும் உங்க கட்சியும்! அதிமுகவிலிருந்து தெறித்து ஓடும் முன்னாள் எம்.பி.! அதிர்ச்சியில் இபிஎஸ்
Related Stories
Recommended image1
Chennai Election Result: தலைநகர் சென்னையில் திமுகவுக்கு செக்.! 16 தொகுதிகளில் தவெக முன்னிலை.. கதறும் ஸ்டாலின், உதயநிதி!
Recommended image2
TVK Vijay: ஆளும் திமுகவை முந்திய தவெக.. 67 இடங்களில் முன்னிலை.. அலறும் அதிமுக.. அதிர்ச்சியில் ஸ்டாலின்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved