தவெக, அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் திரைமறைவில் இருந்து இந்த ஆட்சியை இயக்கப்போவது பாஜகவாக இருக்கும் என்று அதிர்ச்சி தகவல்கள் கூறுகின்றன.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராகி வருகிறது. 50 ஆண்டுகால திராவிட அரசியலின் பிடியை உடைத்து, ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தவெக அரியணையில் அமர ரெடியாகி வருகிறது. திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட பல தொகுதிகளில் தவெக புகுந்து விளையாடியிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கும் பெரும்பான்மை (118 இடங்கள்) கிடைக்கவில்லை.
தவெக 103 தொகுதிகளில் முன்னிலை
இதுவரை விஜய்யின் தவெக 103 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக 70 இடங்களிலும், திமுக 61 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய்யின் தவெக, ஆட்சியைப் பிடிக்க இன்னும் 15 இடங்கள் தேவைப்படுகின்றன. தற்போது கிடைத்துள்ள இடங்களை வைத்துப் பார்த்தால், தவெக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தவெக, அதிமுக கூட்டணி ஆட்சி
தவெக, அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் திரைமறைவில் இருந்து இந்த ஆட்சியை இயக்கப்போவது பாஜகவாக இருக்கும் என்று அதிர்ச்சி தகவல்கள் கூறுகின்றன. ஏற்கெனவே பாஜக திட்டப்படி தான் விஜய் அரசியலில் களம் கண்டதாக தகவல்கள் கூறின. இதேபோல் திமுகவை போல் பாஜகவை விஜய் அதிகம் விமர்சிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஏற்கெனவே கரூர் சம்பத்தில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இதை பாஜக ஒரு பிடிமானமாக வைத்துக் கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சியை இயக்கப்போகும் பாஜக
மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. இதையும் பாஜக கையில் எடுத்து அதிமுக, தவெக கூட்டணி ஆட்சியை பின்னால் இருந்து இயக்கும் என தகவல்கள் கூறுகின்றன. ஆனால் விஜய் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் அதிமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


